ரஜினி ரசிகன்



Untitled Document



‘முத்தாரம்’ விடாமல் படிப்பவர்கள் நாங்கள். இனி பார்க்கவும் போகிறோம். சன் டிவியில் ‘மெட்டி ஒலி’ சித்திக்கின் தயாரிப்பு என்றால் சொல்லவும் வேண்டுமோ!
- டி.வசந்தா, திண்டுக்கல்-1.


உத்தரப்பிரதேசத்தில் தவிக்கும் நவீன பாஞ்சாலிகளைப் பற்றிப் படித்தபோது கண்களில் ரத்தம் வடிந்தது.
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
 
தமிழ் திரைப்படப் பாடல்களின் ஆவணமாகத் திகழும் ரங்காராவின் இசைத்தட்டு சேகரிப்பு தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! 
 
- எம்.சஃபி, மதுரை.

சர்வதேச அடையாளச் சின்னமாக இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகிற நடவடிக்கை மனதை வலிக்கச் செய்கிறது. 
 
- நாகராஜன், திருச்சி-7. 
 

காற்றிலிருந்து தண்ணீர் அளிக்கும் ‘ஆகாஷ் கங்கா’ சாதனம் வெகு புதுமை. இன்னமும் மலிவு விலையில் கிடைத்தால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவர். 
 
- காமாட்சி சத்தியநாராயணன், சென்னை-61.
 

சிலைகள் களவாடப்படுவதைப் பற்றிப் படித்து மனமுடைந்து சிலை போல ஆனேன். கடத்தல்காரர்களை அந்த தெய்வமே தண்டித்தால்தான் உண்டோ? 
 
-  ஆர்.சுகுமாரி, சிவகங்கை.
 

‘ஒஸ்தி’ படத்தில் பின்னணிப் பாடகியாக செகண்ட் இன்னிங்¬ஸ் ஆரம்பித்திருக்கிறார் காந்தக் குரலழகி எல்.ஆர்.ஈஸ்வரி. இனி தமிழகம் ஜர்தா பீடா போல அவங்க பெயரைத்தான் மெல்லும்! 
- இரா.வளையாபதி, கரூர்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய ‘அப்டுடேட்’ தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு ரஜினி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறீர்கள்!
 
 
- த.சத்தியநாராயணன், சென்னை-39.
 
பாடலாசிரியர் பழநிபாரதி பக்கம் படித்தேன். பல் தேய்க்க உமிக்கரி எவ்வளவு சிறந்தது என்பதை தாத்தாமார்களிடம் கேட்டால் தெரியும். அவ்வளவு மகத்துவமுங்க!  
 
- வே.முருகேசன், சென்னை88.

‘நண்பன்’ படத்தின் மும்மூர்த்திகளான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் பற்றி ஷங்கர் சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது.  
 
- டி.வெங்கடேஷ்பாபு,காரமடை.
 

தன் இசையால் கோடானுகோடி உள்ளங்களின் சோகத்தை இசைஞானி தீர்த்து வைத்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறுவதற்கும் அந்த இசையே துணை நிற்கட்டும்.
 
- வி.நிம்மி, சென்னை-62.
 
 
உழைப்புக்கேற்ற உயர்வு நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்துக் காட்டியது சீனாவின் ஹுவாக்ஸி கிராமம்!  
 
-எஸ்.கோபாலன், சென்னை-61.