தத்துவம் மச்சி தத்துவம்





‘‘சினிமா தியேட்டருக்கு ஏன் போலீஸ் நாய் வந்திருக்கு..?’’
‘‘இந்தப் படத்தோட கதை எங்கேயிருந்து திருடப்பட்டதுன்னு மோப்பம் பிடிக்க வந்திருக்காம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘டென்ஷன்’ குறைஞ்சா சந்தோஷப்படலாம். ‘பென்ஷன்’ குறைஞ்சா சந்தோஷப்பட முடியுமா?
- பென்ஷனை நம்பி வாழ்ந்து கொண்டிருப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.


‘‘எப்பவும் திருடிட்டு நேரா போலீஸ் ஸ்டேஷன் வருவே. இப்போ ஏன் கபாலி திடீர்னு கோர்ட்ல போய் சரணடைஞ்சுட்டே..?’’
‘‘மாமூல் கொடுக்க பணம் இல்லே ஏட்டய்யா...’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

''கட்சிக்கு எப்படிப்பட்ட புது உறுப்பினர்களா சேர்க்கணும் தலைவரே..?’’
‘‘பொதுக் கூட்டத்தை கடைசிவரை பொறுமையா இருந்து கேட்கற தொண்டர்களாத்தான் சேர்க்கணும்யா!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘லவ்’ என்பது ரோடு
கிராஸிங் மாதிரி...
வெயிட் பண்றவங்க கடந்து போயிடுவாங்க!
அவசரப்படறவங்க அடி
பட்டுடுவாங்க!
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.


‘‘எதுக்கு டாக்டர் காஷ்மீர்ல இருக்கிற கிளினிக்ல போய் என்னை டெஸ்ட் எடுக்கச் சொல்றீங்க..?’’
‘‘உங்களுக்கு ‘பார்டர்’ல சுகர் இருக்கான்னு செக் பண்ணணும்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

அஜித், விஜய் மேல உள்ள அபிமானத்துல சிலர் ரசிகர் மன்றம் அமைக்கலாம்; நற்பணி மன்றம் அமைக்கலாம். ஆனா சட்டமன்றத்தையோ, பாராளுமன்றத்தையோ அமைக்க முடியாது!- கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தே கெட்டுப் போனோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.