நியூஸ் வே





ஹாலிவுட் போகும் இந்திய நடிகைகள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் கங்கனா ரணாவத். ஆனால் அவர் போவது நடிகையாக அல்ல, இயக்குனராக! ஹாலிவுட் குழு ஒன்றுடன் சேர்ந்து அவர் இயக்கப் போவது ஒரு ஷார்ட் ஃபிலிம். ஒரு குழந்தைக்கும், அந்தக் குழந்தையின் வளர்ப்பு நாய்க்கும் இடையே இருக்கும் நெகிழ்ச்சியான உறவைச் சித்தரிக்கும் படம். சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டும் இது திரையிடப்படுமாம்!

‘இரண்டாம் உலகம்’ படத்தின் பெரும்பகுதியை ஜார்ஜியா நாட்டில் எடுத்து முடித்திருக்கிறார் செல்வராகவன். எந்த மாதிரி லொகேஷன் கேட்டாலும், உடனே அரசே ஏற்பாடு செய்துகொடுக்கிறதாம் அங்கு. படப்பிடிப்புக்கான வசதிகளையும் தயங்காமல் செய்து தருகிறார்கள். சுற்றுலா வளர்ச்சிக்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள். இந்தத் தகவல் பரவி, இப்போது பல தமிழ் டைரக்டர்கள் ஜார்ஜியா போகத் தயாராகிறார்கள்.

‘ஐ’ படத்தின் முதல் ஷெட்யூல் அநேகமாக சீனாவில் நடக்கும் என்கிறார்கள். ஷங்கர், விக்ரம் என ஒரு பெரிய படையே பயண ஏற்பாடுகளில் பிஸி!