தத்துவம் மச்சி தத்துவம்1





‘‘ஓட்டல்ல சரக்கு மாஸ்டரைத்தானே வேலைக்கு வைப்பாங்க... அந்த ஓட்டல்ல எதுக்கு ஸ்டன்ட் மாஸ்டரை வச்சிருக்காங்க..?’’
‘‘குத்து பரோட்டா போடறதுக்கு...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.


‘‘நான் விட்ட அறிக்கையைப் பத்தி ஜனங்க என்னய்யா பேசிக்கறாங்க..?’’
‘‘தலைவருக்கு சூப்பரா ‘காமெடி ஸ்கிரிப்ட்’ எல்லாம் எழுத வருதேன்னு பேசிக்கறாங்க தலைவரே!’’
- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.

குளவிக்கூடுல குளவி இல்லாம இருக்கலாம்; குருவிக்கூடுல குருவி இல்லாம இருக்கலாம்... ஆனா, எலும்புக்கூடுல எலும்பு இல்லாம இருக்குமா?
- எலும்பில்லா நாக்கை நம்பி நரம்பில்லாமல் பேசுவோர் சங்கம்
- மதிராஜன், மதுரை.

என்னதான் பெரிய விண்வெளி விஞ்ஞானியா இருந்தாலும், ‘உலை’ வச்சாதான் சாப்பிட முடியும். அணுஉலையை வச்சு சாப்பிட முடியாது!
- அடுத்தவர்கள் வேலைக்கு உலை வைக்காதோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

படிக்கிற பசங்க, என்னதான் வீட்ல அம்மா சொல்ற அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்சாலும், அதையெல்லாம் ‘ஹோம் ஒர்க்’னு ஸ்கூல்ல ஏத்துக்க மாட்டாங்க!
- வீட்டு வேலை செய்யும்போது கட் அடிப்போர் சங்கம்
- ஏ.ஸ்ரீதர், பொன்மேனிபுதூர்.

‘‘போலீஸ் ஸ்டேஷன்ல ஏன் ஆலமரம் செட் போட்டிருக்கு..?’’
‘‘இந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கட்ட பஞ்சாயத்தும் செய்வார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.