சுவாமி ஜாலியானந்தா






‘‘இவரோட அருள்சக்தி வகுப்புல கலந்துக்கிட்டா நிலாவுக்குக் கூட போயிடலாம்னு உடான்ஸ் விடறாரே... நில மோசடி மாதிரி நிலா மோசடி வழக்குல மாட்டுவார் பாரேன்!’’

‘‘எவனோ சேட்டைக்காரன் ‘நேச்சுரல் டை’ன்னு காபி டிகாஷனைக் கொடுத்துட்டுப் போயிருக்கான். பூசிக்கிட்டு தூங்கின குருஜியை எறும்பு கடிச்சு, மூஞ்சி இப்படி ஆகிடுச்சு!’’

‘‘நகைக்கடைக்காரன் பொண்ணுகிட்ட செய்கூலி, சேதாரம் இல்லாம ஞானம் கிடைக்குமான்னு வாலாட்டினாரு... அப்பன் வந்து செய்கூலியோட, சேதாரத்தையும் குடுத்துட்டுப் போயிட்டான் டாக்டர்!’’

‘‘குருஜி தலைக்கு மேல ஒளிவட்டமெல்லாம் இல்ல! கடுப்புல அவன் அவன் கத்தியோட வந்துடறான்... அதான் மெட்டல் டிடெக்டர் வளையம்!’’

‘‘ஓடாதீங்க குருவே! ஆர்டிஎக்ஸை உள்ள போட்டுடலாமான்னு அவர் கேட்டது வெடிகுண்டை இல்லை... புது மாடல் காரை!’’

‘‘டேய்! இவனைக் கொஞ்சம் கண்காணிங்க. அடிக்கடி இன்சூரன்ஸ் ஏஜென்ட்டைக் கூட்டிக்கிட்டு வந்து ‘பாலிசி போடுங்க’ன்னு நச்சரிக்கறானே... போட்டுத் தள்ள பிளான் போடறானோ!’’