முறுக்கேறிய தல...





இன்னும் தலைப்பிடாத படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேரும் அஜித்திடம் இதுவரை பார்க்காத ‘புது லுக்’ வேண்டுமென்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கேட்க, ஜிம்முக்குப் போய் அஜித் பத்து கிலோ உடல் மெலிந்த விஷயம் சமீபத்தில் பரவலாக வெளிவந்தது. இப்போது அதன் அடுத்த கட்ட ஸ்டில்லை வெளியிட்டு அஜித் மீதான தன் ஆச்சரியத்தைக் கொட்டியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.



‘‘நியூ லுக் கேட்டப்ப, ‘அவ்வளவுதானே..? பதினைந்து நாள் டைம் குடுங்க... நீங்க கேட்ட லுக்கைக் கொடுக்கிறேன்!’ என்றபடி ஜிம்முக்குப் போன அஜித், அங்கேயே பழிகிடந்து உடலைக் குறைத்தது ஆச்சரியமில்லை. ஆனால் நானே எதிர்பார்க்காத அளவில சதைகளை முறுக்கேற்றி, ஆளே மாறி நிற்கிறார். அவர் ஃபீல்டுக்கு வந்து இருபது வருஷங்கள் ஆகுது. ஆனா இன்னைக்கும் தன் வார்த்தையைக் காப்பாத்தற டெடிகேஷன் அவர்கிட்ட இருக்கு. ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும்போதும், அந்த டெடிகேஷன் கூடிக்கிட்டே போறதைப் பார்த்து ஆச்சரியமா இருக்கு. இதுவரை உடல்ல பதிமூணு சர்ஜரிகள் அவருக்கு நடந்திருக்கு. இந்த நிலையிலயும் தினமும் ஆறு மணி நேரம் ஜிம்முல உடற்பயிற்சி செய்து உடலைக் கடினமாக்கறது சாதாரண விஷயமில்லை. இந்த அர்ப்பணிப்புக்காக அவரது ரசிகர்கள் மட்டுமில்லாம, எங்க மொத்த யூனிட்டே பெருமைப்படறோம்..!’’

மேட்டர் சூப்பர்தான். ‘தல’ படத்துக்கு சீக்கிரம் ‘தலைப்பு’ சொல்லுங்க விஷ்ணு..!