தீபாவளி குறள்





இந்தக் குறள்களுக்கு பரிமேலழகர் உரையில அர்த்தம் தேடிப் பாருங்க. கண்டிப்பா இருக்காது!  

மகிழ்வெனப் பட்டதே தீபாவளி அஃதும்
கடன்வாங்குவது இல்லாயின் நன்று.

மகிழ்வெனப் பட்டதே தீபாவளி அஃதும்
கடன்வாங்குவது இல்லாயின் நன்று.

இனிப்பை இவனால் செய்து முடிக்கும் என்றாய்ந்து
அதனை கணவன்கண் விடல்.

தந்தை மகற்குஆற்றும் உதவி பலகாரத்துக்கு
முந்தி யிருப்பச் செயல்.

வெடித்த பொழுதிற் பெரிதுவப்பான் தன்வெடியால்
பிறர் காது செவிடானதை.

தரமறிந்து வாங்காதான் பட்டாசு வெடிப்பதுபோல
புஸ் ஸாகிக் கெடும்.

தோன்றின் மோதிரத்தொடு தோன்றுக அஃதிலார்
மாப்பிள்ளைமுன் தோன்றாமை நன்று.

நகையும் பட்டும் தராதவர்க்கு இல்லை மனைவிமுன்
ஏறுபோல் பீடு நடை.

சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

மாமூலாய் பெற்ற பட்டாசு, ஐப்பசி
மழையால் நனைந் தற்று.