விண்ணில் பறக்கும் விஸ்வரூப இசை...





‘விஸ்வரூபம்’ படத்தோட ஆடியோ வெளியீட்டை தன் பிறந்தநாளன்னைக்கு வச்சிருக்க கமல், பறந்து பறந்து அதை நடத்தப் போறார். ஒரே நாள்ல சென்னை, மதுரை, கோவைன்னு மூணு இடங்கள்ல ஆடியோ ரிலீஸ் நடக்கிறதால, ஒரு விமானத்தை ரென்ட்டுக்கு எடுத்திருக்கிறாராம். எதுவும் செய்வார் உலகநாயகன்..! 

விஜய் டைரக்ட் பண்ணவிருக்க விஜய் படத்தோட வேலைகள் ஜரூரா போய்க்கிட்டிருக்கு. தன் கதை விவாதக் குழுவோட மும்பைல முகாமிட்டிருக்க விஜய், வரும்போது பக்காவான ஸ்கிரிப்ட்டோட வர ப்ளான் பண்ணியிருக்கிறார். இந்த தடவையாவது ‘கதைப் பிரச்னை’ வராம பாத்துக்கங்க விஜய்..!
தமிழ், இந்தியில விக்ரம் நடிக்கிற ‘டேவிட்’ பட வேலைகள் ஒருபக்கம் மும்முரமா போய்க்கிட்டிருக்கு. படத்துல ஒரு ‘ஐட்டம் நம்பர் சாங்’குல விக்ரம் கூட ஆட ரெடியான்னு கமலோட முன்னாள் மனைவி
சரிகாகிட்ட டைரக்டர் பிஜோய் நம்பியார் கேட்க, சரிகாவும் ஓகே சொல்லியிருக்காங்க. ஸிணீக்ஷீமீ றிணீவீக்ஷீ..!
ஜாமீன்ல ரிலீசான ‘பவர் ஸ்டாரை’ வச்சு ‘லட்டு தின்ன ஆசையா’ பட வேலைகள் சுறுசுறுப்பு அடைஞ்சிருக்கு. சினிமால நடிக்க அவர் கௌதம் மேனன்கிட்ட சான்ஸ் கேக்கிறதா வர்ற சீனுக்கு கௌதம் மேனனையே நடிக்க வைக்கிறாங்களாம். பவர் ஸ்டாரோட பவர் கூடிக்கிட்டுதானே போகுது..?
‘நீர்ப்பறவை’ படத்துல பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை நீக்கச் சொல்லி எதிர்ப்புகள் வலுக்கவே, ஒரு பாடல்ல இருக்கிற பைபிள் வரிகளை நீக்கிடறோம்னு சொல்லி
யிருக்கார் படத்தோட டைரக்டர் சீனுராமசாமி. வைரமுத்து சம்மதத்தோடதானே..?
‘காவலன்’ல விஜய்க்கே ஜோடியா நடிச்சிருந்த மித்ரா, அடுத்து பெரிய ஹீரோக்களோட நடிக்க சான்ஸ் வரும்னு எதிர்பார்த்தது நடக்காம போனாலும், வர்ற சான்ஸ்களை விடறதில்லை. இப்ப ராம்குமார் மகன் சிவாஜிதேவ் ஜோடியா ‘நந்தனத்’துல நடிக்குது மித்ரா. ‘ஒரு வாரக் காதல் கதை’யாம் இது..!
‘துப்பாக்கி’ டைட்டில் பிரச்னை முடிவுக்கு வந்து ஆடியோ ரிலீசாச்சு. இப்ப டைட்டிலுக்குப் பஞ்சாயத்து வச்ச அதே ‘கள்ளத்துப்பாக்கி’ தீபாவளிக்கு வர்றதா சொல்லி அடுத்த போட்டிக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க. ‘துப்பாக்கி’யும் தீபாவளிக்கு தான் ரிலீஸ்..!
மைக் மோகனை நினைவிருக்கில்ல..? யாராவது நடிக்கக் கூப்பிடுவாங்கன்னு பொறுத்துப் பார்த்த அவர், பொங்கியெழுந்து இப்ப தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகள்லயும் மலையாள ‘பியூட்டிஃபுல்’ படத்தை ரீமேக் பண்றார். மூணுலயும் வேற வேற ஆர்ட்டிஸ்ட்ஸ்ங்கிறது அதுல ஹைலைட்..!


கல்வியறிவு எவ்வளவு முக்கியம்ங்கிறதை வலியுறுத்தி தயாராகிற ‘விஜயநகரம்’ படத்துல ஒரு பாடல்ல 10 திருக்குறள்களை அழகா இசையமைக்க வச்சு சேர்த்திருக்காராம் டைரக்டர் தன்வீர். அப்படியாவது பத்து குறள் மனப்பாடம் ஆகட்டும்..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ

‘த்ரீ டி’ல வர்ற ‘கா..னா’ படத்தோட ரெண்டாவது பாகத்துக்கு ‘ஆட்ட டைரக்டர்’ பிள்ளையார் சுழி போட்ட நேரம், அவர் டைரக்ட் பண்ணியிருக்க லேட்டஸ்ட் டோலிவுட் பட புரட்யூசர் அவரைப் பஞ்சாயத்துக்கு இழுத்திருக்கார். பட்ஜெட்டுக்கு மேல போய்ட்டாராம். இவரும் பதிலுக்கு ‘அவங்க சொன்ன மாதிரி எனக்கு டப்பிங் ரைட்ஸ் தரலை’ன்னு டைரக்டர்ஸ் அசோஸியேஷனுக்கு அவங்களை இழுத்திருக்கார். ஆக்ஷன்... ரியாக்ஷன்..!

ஆம்பளைக் குரல்ல பேசி பயமுறுத்திக்கிட்டு இருக்கிற அம்‘மணி’யைப் பத்தி ஏற்கனவே கோலிவுட்ல ஒரு காமெடி உண்டு. ஆம்பளையைப் பொம்பளையா மாத்தி ஹீரோயினாக்கிய கதையை வச்சு அவங்க குருநாதர் எடுத்தது அம்‘மணி’யோட சொந்தக் கதைங்கிறதுதான் அந்தக் காமெடி. இப்ப உண்மையிலேயே ஒரு ஆண், பெண் வேடம் போட்டு ஏமாத்தற கதையில அம்‘மணி’யை நடிக்கக் கேட்டு மலையாளத்துல ஒரு ஆஃபர் வந்திருக்காம். ஒத்துக்கவும் முடியாம, வெட்டி விடவும் முடியாம முழிக்குதாம் அம்‘மணி’..!