தீபாவளி தத்துவம்





‘‘ரயில் வெடியை பத்த வச்சதும் என்னவோ பேசுதே..?’’
‘‘பத்து நிமிடம் கால தாமதமா வெடிக்கும்னு அறிவிப்பு
பண்ணுது..!’’
- அ.ரியாஸ், சேலம்.

சிவகாசிக்குப் போறவங்க ‘குட்டி ஜப்பானு’க்குப் போறேன்னு சொல்லலாம். ஆனா ஜப்பானுக்கு போறவங்க ‘பெரிய சிவகாசிக்குப் போறேன்’னு சொல்ல மாட்டாங்க!
- யாரும் மாத்திக் கேட்காதபடி சரியான தீர்ப்பைச்
சொல்வோர் சங்கம்
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

‘‘ஜெயில் வாசல்ல எதுக்கு பட்டாசு வெடிக்கறாங்க..?’’
‘‘உள்ளே போன தலைவருக்கு இது தலை தீபாவளி..!’’
- அம்பை தேவா, சென்னை-114.

‘‘என் வீட்டுக்காரர் வருஷா வருஷம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பட்டாசு வாங்குவாரு...’’
‘‘அம்மாடியோவ்... அஞ்சு லட்சத்துக்கா?’’
‘‘ஆமா! பட்டாசுக் கடை வைச்சா வாங்கித்தானே
ஆகணும்?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘ஆனாலும் தலைவருக்கு ஓவர் தன்னம்பிக்கை...’’
‘‘என்ன செய்தார்..?’’
‘‘தீபாவளிக்கு வாங்கின எல்லா பட்டாசுகளையும் வெடிச்சிடாம, 2014 லோக்சபா தேர்தல் வெற்றி விழாவுக்கு எடுத்து வையுங்கன்னு கட்சிக்காரங்க கிட்ட சொல்றாரே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘லட்சுமி வெடி இருக்கா..?’’
‘‘அது அவுட் ஆஃப் ஃபேஷன்... லட்சுமி மேனன் வெடிதான் இருக்கு!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.