ஜோக்ஸ்





‘‘ஒவ்வொரு வருஷமும் இந்தக் கடையிலதான் தீபாவளிக்கு பசங்களுக்கு வெடி வாங்கிக் கொடுப்பேன்... எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை!’’
‘‘அவ்வளவு நம்பிக்கையான கடையா..?’’
‘‘நீங்க வேற... ஒரு வெடியும் இதுவரை வெடிச்சது இல்லை!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘உங்க வீட்டுல தினமும் பட்டாசு சத்தம் கேட்குதே... ஏன்?’’
‘‘தினமும் நடக்கற மாமியார் - மருமகள் சண்டையில, ஜெயிக்கற சைடு பட்டாசு வெடிப்பாங்க!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘இந்த தீபாவளிக்கு உங்க மனைவியை பட்டுப் புடவை எடுக்க விடாம தடுத்திட்டீங்களா... எப்படி?’’
‘‘அவகிட்ட, ‘கரன்ட் இருக்கும்போது ஜவுளிக்கடைக்குப் போ’ன்னு சொல்லியிருந்தேன்!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘குருவி வெடின்னு கேள்விப்பட்டிருக்கேன்... அது என்ன புதுசா காக்கா வெடி?’’
‘‘கடைக்காரரை காக்கா பிடிச்சு, ஓசியில வாங்கின வெடி!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைதீபாவளிக்கு என்ன கேட்டாலும் தர்றேன்னு மாப்பிள்ளைகிட்ட சொன்னது தப்பா போச்சு...’’
‘‘ஏன்?’’
‘‘இப்ப என்னோட ரெண்டாவது பெண்ணைக் கேட்கிறாரு..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தீபாவளி அன்னைக்குத்தான் தலைவர் வீட்டுல நிம்மதியா இருப்பாரா... ஏன் அப்படி?’’
‘‘அவரோட மனைவி எவ்வளவு கத்தி திட்டினாலும், வெடிச் சத்தத்துல அவர் காதுல விழாதே!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

ஸ்பீக்கரு...

‘‘இந்த தீபாவளிக்கு தலைவர் அவர்கள் நடிப்பில், மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கடற்கரையில்... விரைவில் எதிர்பாருங்கள்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.