ஜோக்ஸ் தீபாவளி தத்துவம்





‘‘தீபாவளி சமயம்ங்கிறதால தலைவர் மேல உள்ள எதிர்ப்பை வித்தியாசமா காட்டறாங்களா... எப்படி?’’
‘‘செருப்புல பட்டாசு கட்டி வச்சு, அதைக் கொளுத்தி அவர் மேல வீசறாங்க!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவர் புதுசா சஸ்பென்ஸ் வெடி வச்சுருக்காராமே...’’
‘‘ஆமா... அதை பத்த வச்சா எப்ப வெடிக்கும்னு யாருக்கும் தெரியாது!’’
- அம்பை தேவா,சென்னை-114.

என்னதான் கம்ப்யூட்டர் கீ போர்டுல ‘கேப்ஸ்’ இருந்தாலும், அதை தீபாவளித் துப்பாக்கில போட்டு வெடிக்க முடியாது!
- தத்துவ மேப்ஸில் கேப்ஸை தேடுவோர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘மப்புல இருந்த தலைவரை திருமண விழாவுல பேச விட்டிருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்ன உளறித் தொலைச்சார்?’’
‘‘இந்த வருடம் தலை தீபாவளி காணப் போகும் மணமகன், இன்னும் நிறைய தலை தீபாவளிகள் காண வாழ்த்துகிறேன்னு பேசிட்டார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘அந்த ஜவுளிக்கடையில நீ திருடின பொருட்களோட மதிப்பு பத்து லட்சம் ரூபாய்னு சொல்றாங்க... நீ அஞ்சு லட்சம்தான்னு சொல்றே?’’
‘‘தீபாவளித் தள்ளுபடி 50 சதவீதம்னு அந்த ஜவுளிக்கடையில போட்டிருந்தாங்களே யுவர் ஆனர்!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

‘‘நான் செஞ்ச ஸ்வீட்டை என்னாலயே சாப்பிட முடியலை... நீங்க எப்படி சாப்பிட்டீங்க?’’
‘‘குடிபோதையில ஊறுகாய்னு நினைச்சு அள்ளி மேஞ்சுட்டேன் செல்லம்மா..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தலைவர் ரொம்ப மாறிட்டார்...’’ ‘‘எப்படி..?’’ ‘‘தீபாவளியைக் கூட கைதிங்களோடதான் கொண்டாடுவேன்ங்கறார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.