நியூஸ் வே





*  உலகெங்கும் நாடாளுமன்றங்களை வழிநடத்தும் பெண் சபாநாயகர்களின் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மீரா குமார்தான் தலைமை. வந்திருந்த 13 சபாநாயகர்களுக்கும் பனாரஸ் பட்டுச்சேலை எடுத்துக் கொடுத்த மீரா, அவர்களுக்கு இன்ஸ்டன்ட்டாக அளவெடுத்து பிளவுஸும் தைத்துக் கொடுத்துவிட்டார். அதோடு புடவை கட்டுவதில் உதவி செய்ய பெண் உதவியாளர்களையும் அனுப்பி வைத்தார். இந்திய அன்பில் நெகிழ்ந்துவிட்டனர்
அவர்கள்.

*  இனி உடலைக் காட்டும் கிளாமர் உடைகளை அணிந்துகொண்டு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ராக்கி சாவந்த். இதற்காக 50 செட் சல்வார் கமீஸ் தைத்தாயிற்று! ‘‘குடும்பத்தினரும் நண்பர்களும் சங்கடப்படுவதைத் தவிர்க்கவே இந்த முடிவு’’ என்கிறார் ராக்கி.



*  பாடகி லேடி காகாவின் அப்பா ஒரு ஹோட்டல் திறந்திருக்கிறார். அத்தனை அயிட்டங்களும் ருசியாக இருப்பதால், அங்கு சென்று சாப்பிட்டாலே ஐந்து பவுண்டு எடை கூடிவிடுகிறதாம் லேடி காகாவுக்கு! இதனால், அப்பா சாப்பிடக் கூப்பிட்டாலே அலறுகிறார்.

*  தக்காளி நிறைய சாப்பிட்டால் ஸ்டிரோக் தாக்கும் அபாயம் குறை கிறதாம்! பின்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோ பீன் என்ற சிவப்பு
ரசாயனம் நம் ரத்தத்தில் அதிகம் இருந்தால் நமக்கு ஸ்டிரோக் வருவது தடுக்கப்
படுகிறது. இனிமேல்
‘தக்காளி...’ என யாரையும் திட்டாதீர்கள்!



வாய்ஸ்
‘‘நான் கடவுளை நம்புவதைவிட பேய்களை அதிகம் நம்புகிறேன். ஏனெனில், பேய்களாவது இங்கும் அங்குமாக சில நல்லது கெட்டதுகளை செய்வதாக அறிந்துகொள்ள முடிகிறது. கடவுள் எதையும் செய்து நான் பார்த்ததில்லை!’’
- இயக்குனர்
ராம்கோபால் வர்மா


‘‘மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. அப்புறம் ஏன், நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பதில் எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள்?’’
- நடிகை சோனாக்ஷி சின்ஹா