தத்துவம் மச்சி தத்துவம்





எவ்வளவு பெரிய வக்கீலா இருந்தாலும், நியூட்டன் ‘லா’வை வச்சு கோர்ட்டுல வாதாட முடியாது!
- மல்லாந்து படுத்துக்கொண்டு ‘லல்லலா’ பாடியபடி சிந்திப்போர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘2014ல் உலகம் அழியப்போகுதுன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு...’’
‘‘ஏன்... என்ன செஞ்சார்?’’
‘‘கட்சியை இப்பவே கலைச்சிடலாம்ங்கறார்..!’’
- தென்றல் நாசர், சங்ககிரி.

‘‘புத்தகமா வெளியிட்டா ‘ராயல்டி’ கிடைக்குமான்னு தலைவர் கேட்கிறார்...’’
‘‘அவருடைய சுயசரிதையையா..?’’
‘‘இல்லீங்க... அவருக்குக் குடுத்த குற்றப் பத்திரிகையை..!’’
- வே.முருகேசன், சென்னை-88.

என்னதான் பாம்பு படமெடுத்தாலும், அது விநியோக உரிமையெல்லாம் கேட்காது!
- தயாரிப்பாளர் கிடைத்தால் ஓசியில் கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘இந்தப் புலவர்தான் நம் நாட்டிலே அதிக வயதானவராக இருப்பார்னு நினைக்கிறேன்...’’
‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’
‘‘நமது மன்னரின் தாத்தா போர்க்களத்திலிருந்து ஓடி வந்ததைக் கூட பாடலாகப் பாடுகிறாரே..!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

‘‘யோகா மாஸ்டர் வீட்ல ஏன் இவ்வளவு கூட்டம்..?’’
‘‘மாமியாரும் மரு மகளும் தலைகீழா நின்னபடி சண்டை போட்டுக்கறாங்க..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் நகைக்கடையில நாம ‘கேட்ட’ மாடல்ல ‘ரிங்’ தந்தாலும், அதையெல்லாம் ‘கேட்டரிங்’னு சொல்ல முடியாது.
- சமையல் செய்தபடியே, மனைவிக்கு மோதிரம் வாங்க சிந்திப்போர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.