அன்றும் இன்றும் என்றும்





‘ரஜினி 12.12.12 சீக்ரெட்ஸ்!’ - ஒளிவுமறைவின்றி ரஜினியை ஒரு உயர்ந்த மனிதனாகக் காட்டியது. மேலும், ‘ரஜினி கெட்டப்ஸ்’, ‘பஞ்ச்!’ ஆகியவையும் இனித்தன. அன்றும் இன்றும் என்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி, ‘ரியலி’ சூப்பர்மேன்தான்!
- மயிலை.கோபி. சென்னை-83.,லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

மணிரத்னத்தின் ‘கடல்’ பற்றிய எதிர்பார்ப்புகளை, படம் பற்றிய First Look எகிற வைத்திருக்கிறது.
- எம்.சம்பத், கரூர்.
11 ஆண்டுகளாக ‘நகல் காந்தியாக’ ஊர் ஊராகச் சென்று காந்தியக் கொள்கைகளை பிரசாரம் செய்து வரும் மகேஷ் சதுர்வேதியும் ‘ஒரு தியாகி’தான் என்பதில் சந்தேகமில்லை.
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.,
பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்
.

‘பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத ஒரு மனுஷன் வாழ்க்கையைத் தவிர வேறெதை எழுத முடியும்?’ - கொத்தனார் வேலை பார்த்துக் கொண்டே இலக்கியம் படைக்கும் புதுகை மணவாளனின் இந்த வார்த்தைகளில் ஆயிரம் தத்துவங்கள் பொதிந்துள்ளன.
- காந்தி லெனின், திருச்சி.,  எஸ்.சாந்தி, காட்பாடி.

‘செம்பருத்தி’யில் கதாநாயகியாக நடிகை ரோஜாவைக் கண்டுபிடித்த கதையை ஆர்.கே.செல்வமணி விவரித்த விதத்தைப் பார்க்கும்பொழுது... ஆங்கிலப் பட கார் சேஸிங் தோற்றது போங்கள்!
- ந.பேச்சியம்மாள், சிதம்பரம்-1.

‘மானியங்களின் தேசம்’ அருமையான சர்ச்சை. உண்மையில் மானியங்கள் என்பது இந்தப் பக்கம் கொடுத்து அந்தப் பக்கம் பிடுங்கிக்கொள்ளும் நாடகம்தான் என்பதை கட்டுரை புரியவைத்துவிட்டது.
- கே.என்.சுப்பிரமணியன், சென்னை-15.

‘நிழல்கள் நடந்த பாதை’யில் பலரும் நெருங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய பக்கத்தை நெருங்கியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன். அடித்தல் என்ற ‘சகஜ நிகழ்வு’, இன்னும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்!
- கோமதி பழனிச்சாமி, கன்னியாகுமரி.

ஆல்தோட்ட பூபதியின் இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நாஞ்சில் சம்பத்தின் அரசியல் மாற்றம் பற்றிய அருமையான விமர்சனம்!
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.

‘தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?’ கட்டுரை தமிழக மக்களின் மனக்குமுறலின் வெளிப்பாடாகவே இருந்தது. ‘மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கடைசியில் வைத்த
‘பஞ்ச்’, சபாஷ்!
-ஆ.ம.மதுவந்திகா, திருவண்ணாமலை.

‘காதல் போரடிக்காது’ என்ற கௌதம் மேனனின் வார்த்தைகள், கவிதை. சாதியத் தீயில் ஊரே தகித்துக் கிடக்கும் இந்தச் சமயத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ குளிரும் தென்றலை வீசட்டும்!
- கரு.பாலகிருஷ்ணன், மதுரை-20.