தத்துவம் மச்சி தத்துவம்





தங்கம், வெள்ளி நகைகளை அடகு வச்சா பணம் கிடைக்கும்... ஏன், பித்தளை பாத்திரங்களை அடகு வச்சாலும் கிடைக்கும். மனசாட்சியை அடகு வச்சா ஒரு பைசா கூட கிடைக்காது!
- எதையாவது அடகு வைத்து காலத்தை ஓட்ட நினைப்போர் சங்கம்
- எஸ்.கோபாலன், சென்னை-61.

‘‘நம்ம தலைவருக்கு மேடையில துண்டு அணிவிக்கறதுக்காகவே கட்சியில ஒரு அணி உருவாக்கி இருக்காங்களாமே..?’’
‘‘ஆமா... துண்டர் அணியாம்!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


‘‘கல்யாணத்துக்கு முன்னாடி நீளம் தாண்டினேன்... உயரம் தாண்டினேன்...’’
‘‘இப்ப..?’’
‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை...’’
- ஜே.தனலட்சுமி, கோவை.


என்னதான் சிறந்த ஓட்டுனர்னாலும், ‘ஆம்னி பஸ்’ஸை ஓட்டற மாதிரி ஆக்டோ‘பஸ்’ஸை ஓட்ட முடியுமா?
- வாய் வார்த்தைகளாலேயே அடுத்தவரை ஓட்டுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் திறமையான பூக்கடைக்காரரா இருந்தாலும், அவரால ‘மாலை’யைத்தான் கட்ட முடியும். ‘காலை’யையோ, ‘மதியத்’தையோ அவரால கட்டவே முடியாது.
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


ஸ்பீக்கரு...
‘‘எங்கள் ஆட்சியில் தினம் ஒரு ஊழல் அம்பலத்துக்கு வருவதைக் கண்ணார கண்டபின்பும் எங்கள் தலைவரை செயல்படாதவர் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வருகிறது..?’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘கவலை வேண்டாம் மகனே... விரைவில் உன் வாழ்வில் வெளிச்சம் வரும்!’’
‘‘அது மெதுவா வரட்டும் சாமி! மொதல்ல ‘கரன்ட்’ எப்ப வரும்னு சொல்லுங்க...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.