தட்சணை





இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம்பா! பொண்ணு படிச்சிருக்கா... நல்ல வேலையில இருக்கா... இல்லைன்னு சொல்லலை. ஆனா, அதைத் தவிர காசு, பணம் ஒண்ணும் இல்லை. அப்பா வேற இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் செய்ய வேண்டிய சீர், செனத்தி எதையும் செய்ய மாட்டாங்க. அதோட, அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமகனா போறதால, சுமை எல்லாம் உன் தலையில விழும்!’’
‘‘இந்தப் பொண்ணையே பேசி முடிச்சிரும்மா!’’ தயக்கமே இல்லாமல் சொன்னான் வடிவேலு!
‘‘அதில்லைப்பா... கொஞ்சமாவது பணம், காசு...’’
‘‘அம்மா! இந்தப் பொண்ணு யார் சப்போர்ட்டும் இல்லாம, தானாவே படிச்சு, வேலைக்குப் போய், அப்பா இல்லாத குடும்பத்தை காப்பாத்திக்கிட்டு இருக்கா. தங்கைகளை தன்னோட குழந்தைகள் போல பார்த்து, படிக்க வச்சு, அவங்களையும் வேலைக்குப் போக வச்சு, சொந்தக் கால்ல நிக்கற தைரியத்தைக் கொடுத்திருக்கா. கல்யாணம் முடிச்சு பத்து வருஷம் கழிச்சு வர வேண்டிய பக்குவம் இப்பவே இருக்கு! புதுமணத் தம்பதிகளுக்கு குடும்பம் நடத்த உதவியா இருக்கட்டும்னு பெரியவங்களா பார்த்துக் கொடுக்குறதுதானே வரதட்சணை. அந்த தட்சணை எல்லாம் இவகிட்ட தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்புன்னு வேற விதத்துல இருக்கு. எவ்வளவு கஷ்டம்னாலும் இவ சமாளிப்பா. உன்னையும் நல்லா வச்சுக்குவா’’ என்று சொல்லி முடித்த மகனை பெருமையோடும் வியப்போடும் பார்த்தாள் அம்மா.