ஜோக்ஸ்





‘‘பவர்கட் நேரத்துலதான் ஆபரேஷன் செய்வேன்னு டாக்டர் அடம் பிடிக்கிறாரே... ஏன்?’’
‘‘இருட்டுல ரத்தம் அவர் கண்ணுக்கு தெரியாததனால மயக்கம் போட்டு விழ மாட்டாரே... அதான்!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர்,வில்லியனூர்.

நாட்டுக்கோழி நாட்டுக்குள்ளதான் வளரும்; ஒயிட் லகான் கோழியும் ஊருக்குள்ளதான் வளரும். வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது... அதுவும் ஊருக்குள்ளதான் வளர்ந்தாகணும்!
- லெக்பீஸ் கடித்தபடி லெக்சர் அடிப்போர் சங்கம்
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘‘ஹீரோ சார்! க்ளை மாக்ஸ்ல காய்ச்சல் வந்து உயிருக்குப் போராடும்போதும் நீங்க பஞ்ச் டயலாக் பேசுறீங்க...’’
‘‘என்ன டயலாக் டைரக்டர்..?’’
‘‘எனக்கு இப்ப டெங்கு... நீ கொஞ்சம் அடங்கு!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

தோசைன்னா சுடுறதுக்கு முன்னாடி தண்ணி தெளிப்பாங்க... இட்லின்னா சுட்டதுக்கு அப்புறம் தண்ணி தெளிப்பாங்க... இதுதாங்க வாழ்க்கை!
- வீட்டில் தண்ணி தெளித்துவிட்டதால், தெருவில் திரிவோர் சங்கம்
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் ‘அஜித்’தை ‘தலை’ன்னு சொன்னாலும், அவர் கையெழுத்தை ‘தலையெழுத்து’ன்னு சொல்ல முடியுமா?
- தலை கால் புரியாமல் தத்துவங்கள் சொல்வோர் சங்கம்
- அ.பேச்சியப்பன்,ராஜபாளையம்.

‘‘ஏங்க... உங்களை யாராவது கடன்காரன் தேடி வீட்டுக்கு வந்தா, நான் என்ன பதில் சொல்ல?’’
‘‘உட்கார வச்சு உன் கையால ஒரு காபி போட்டுக் கொடு... அதுக்கப்புறம் வரவே மாட்டான்!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘சென்னையை சுத்திப் பார்க்க வந்த வெளிநாட்டுக்காரங்க கிட்ட தலைவர் மானத்தை வாங்கிட்டார்...’’
‘‘அப்படி என்ன செஞ்சுட்டார்..?’’
‘‘இந்த பில்டிங் எல்லாம் வெள்ளைக்காரங்க கட்டினதுன்னு சொல்லி மொபைல் போன் டவர காட்டறாரு!’’‘
- பால்ராசய்யா, ஐரேனிபுரம்.