கேரள இளநீர்





பிளஸ் 2வில் சென்டம் வாங்க நீங்கள் தரும் டிப்ஸ் மாணவ, மாணவியருக்கு ஓர் அரிய வரப்பிரசாதம். எதையும் காலம் அறிந்து கச்சிதமாய் வழங்குவதில் உங்களுக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறுதான்!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

உலகம் அழியப் போகுதோ இல்லையோ... அதுக்கு முன்னே தமன்னா, தன்ஷிகா, இனியா, அஞ்சலியைத் தேடி பிடிச்சு ஒரு வார்த்தை பேசிப்புடணும்னு நினைச்சுட்டீங்க. நடத்துங்க நடத்துங்க!
- என்.வி. சீனிவாசன், சென்னை-63.

‘‘எனக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை. லிவிங் டுகெதர் என்றால் ஓகே. அதுல என்ன தப்பு இருக்கு?’’ என்று இடுப்பழகி இலியானா சொன்னதைப் படித்ததும் ‘‘தப்பே இல்லை’’ என்று கோரஸாகக் கத்தத் தோன்றியது!
- ம.அரங்கநாதன், புதுச்சத்திரம்.

24 வயதில் கூகுள் நிறுவனத்தின் வேலையை உதறித் தள்ளி நம் ஊர் ஏரிகளை சுத்தம் செய்யக் கிளம்பியிருக்கும் அருண் கிருஷ்ணமூர்த்தி, ‘கூகுள் கூகுள்...’ பண்ணிப் பார்த்தாலும் கிடைக்காத பாரதப் பொக்கிஷம்!
- எஸ்.சார்லஸ், வேலூர்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய முடியும் என்ற டாக்டரின் விளக்கம், ஒவ்வொரு மருத்துவமனையிலும் எழுதி வைக்க வேண்டிய அத்தியாவசிய விளக்கம்!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

இன் றைய ஆகப் பெரும் சமூகப் பிரச்னைகளில் காதல் தோல்வியும் முக்கிய பங்கெடுத்துவிட்டது. எதிலும் தோல்வியைத் தாங்கும் மனம் மட்டுமே நினைத்ததை சாதிக்கும் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘கடல்’ பட நாயகி துளசியின் முதல் பேட்டி கேரள ‘இளநீராக’ இனித்தது. சரி, மணி ஓசையாக பேட்டி முதலில் வந்து விட்டது. அடுத்து ‘யானை’ வருமா? அதாங்க,
துளசியின் துள்ளல் புகைப்படங்கள் அடுத்தடுத்த இதழ்களில் வருமா?
- சாந்தி, கல்புதூர்.

‘டிசம்பர் 21ல் உலகம் அழியப் போகிறது’ என்ற வதந்தி பற்றி மனுஷ்ய புத்திரனின் கருத்துகளை அறிந்த பின் கொஞ்சநஞ்சம் மனதில் ஒட்டியிருந்த சந்தேகத் திரையும் விலகிவிட்டது.
- எஸ்.நாகராஜன், திருச்சி.

‘‘வாசிப்பு உள்ளே போகப் போக, ஏதோ ஒரு வழியில் அது வெளிவந்தே ஆகணும்’’ எனும் கவியோவியத்தமிழனின் ஆக்கபூர்வ சிந்தனைகள் அசர வைத்தன!
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.