நியூஸ் வே





நடிகர் அஜ்மல் டாக்டர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் தொழிலாளர்கள் யாராவது உடம்பு சரியில்லாமல் வந்தால், நிறுத்தி சோதித்து மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கிறார்.

ஒரு வாரத்திற்கு மேல் தங்கை பிருந்தாவை பார்க்காமல் இருக்கமாட்டார் சூர்யா. அவுட்டோர் ஷூட்டிங் போய்விட்டு வந்தால், அடுத்த நாள் காலையில் முதல் வேலை தங்கை வீட்டுக்குப் போவதுதான். இரண்டு குழந்தைகளோடும், ஜோவோடும் சேர்ந்துதான் அந்தப் பயணம்.

பாலுமகேந்திராவை பாலா, அமீர், வெற்றிமாறன், சேரன், ராம், சசிகுமார் போன்ற டைரக்டர்கள் ‘அப்பா’ என்றே அழைக்கிறார்கள்.

ஜெயமோகன் நிறுவிய ‘விஷ்ணுபுரம் விருது’ இந்த முறை கவிஞர் தேவதேவனுக்குக் கிடைத்திருக்கிறது. கோவை விழாவில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசையும், பாராட்டு பத்திரத்தையும் இளையராஜா கொடுத்தார். ஜெயமோகன் எழுதிய ‘தேவதேவனின் கவியுலகம்’ நூலும் நிகழ்ச்சியில் வெளியானது.

மடமடவென்று முன்னுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பியாவின் கேரியரில் சற்றே சறுக்கல். தற்போது அவரது கைவசம் இருக்கும் ஒரே படம், ‘கூட்டம்’. ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் ஜீவன் இயக்கும் இந்தப் படத்தில் நக்சலைட் தலைவனின் காதலி கதாபாத்திரமாம். இந்தப் படத்திற்குப் பிறகு தன்னைத் தேடி இயக்குனர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறார்.

சைலன்ஸ்

வால் நடிகை, டைரக்டருக்கு முதல் மனைவியாக இருந்தது தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம், தினம் தினம் நைட் கிளப்களில் அவர் போடுகிற ஆட்டம். அடிக்கடி புது துணையுடன் முக்கியமான நட்சத்திர ஓட்டல்களில் ஆஜராகி விடுகிறார். என்னதான் இருந்தாலும் முதல் மனைவி ஆயிற்றே, டைரக்டர் மனசு கஷ்டப்படுகிறாராம். ‘இதைத் தடுக்க என்ன வழி’ என நண்பர்களிடம் விசாரிக்கிறாராம்.

‘லட்சுமி’கரமான புது நடிகை, ஒரு இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்தவர், அவசர அவசரமாகக் கிளம்பினார். ‘ஒரு நிமிஷம் மேடம்’ என்று போட்டோகிராபர்கள் நிறுத்தியபோது, ‘‘ஐயோ, சார் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார். லேட்டானா திட்டுவார்’’ என பதறியபடி பறந்தார். அந்த தாடிக்காரர் மச்சக்காரர்தான்.