காதலில் விழுந்திருக்கேன்!





மீடியாக்காரர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே சஞ்சரிக்கும் சமந்தாவை சமீபத்தில் சந்தித்தோம். இரண்டடி இடைவெளியில் முகத்தை ஜூம் பண்ணினாலும் மாசு மருவற்று ஜொலிக்கிறது சருமம். (அட, அலர்ஜி செக் பண்ணத்தாங்க!)

‘‘என்னோட கரியர்ல ‘நீதானே என் பொன்வசந்தம்’, வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். ‘பாணா காத்தாடி’, ‘மாஸ்கோவின் காவிரி’ன்னு தமிழ்ல என்னோட ஆரம்பம் சரியா அமையலைங்கற வருத்தத்தை இது போக்கியிருக்கு. ஷங்கர், மணிரத்னம் படங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவி போனதுக்காக கவலைப்படல. எது எது எப்போ அமையணுமோ, அப்போதான் அமையும். ‘சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி... அதனாலதான் கமிட் ஆகலை’ன்னு சலிக்க சலிக்க நியூஸ் எழுதிட்டாங்க. உடம்பில எதிர்ப்பு சக்தி குறைஞ்ச தால கொஞ்சம் ரெஸ்ட்டும் ட்ரீட்மென்டும் எடுத்துக்கிட்டேன்... அவ்வளவுதான்.’’
‘‘தெலுங்குல நீங்கதான் இப்போ நம்பர் ஒன்னாமே?’’

‘‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இது மாறும். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் கெடுதல் நினைக்காம, நேர்வழியில ஜெயிக்கிறோம் பாருங்க... அதுதான் நிரந்தரம். அந்த வகையில் நான் என்னைக்குமே நம்பர் ஒன்னாதான் இருப்பேன்!’’
‘‘இந்தி ஹீரோக்களோட எப்போ டூயட் ஆடப்போறீங்க?’’

‘‘எனக்குள்ள அந்த ஆசை எப்பவும் எட்டிப் பார்த்ததில்லை. அதுக்கான வாய்ப்பும் வரலை. அதுக்காக ஹிந்தி ஹீரோக்களைப் பார்த்து பயமில்ல. மனசுக்கு நூறு சதவீதம் பிடிக்காத விஷயத்துல ஈடுபாடு காட்ட முடியாது இல்லையா?’’

‘‘ ‘நீதானே என் பொன்வசந்தம்’ மாதிரி பள்ளிப் பருவக் காதல் உங்களுக்கு உண்டா?’’
‘‘இதுக்கு, ‘இல்லை’ன்னு யாரு பதில் சொன்னாலும் அது பொய்தான். நான் பொய் சொல்லமாட்டேன். ஸ்கூல், காலேஜ் ரெண்டு ஸ்டேஜ்லயும் காதல் வந்திருக்கு. ஆனா, அப்ப பக்குவமில்லாத தால அது உண்மையான காதலா இருந்ததில்ல. அதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தா காமெடியா தெரியுது.’’ என்னும் சமந்தா அடுத்ததாகவும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். ஹீரோ, இயக்குனர் யாரென்றால், ‘‘நெக்ஸ்ட் மீட்டிங்கில் சொல்றேன்’’ என கையசைக்கிறார்.