ஜோக்ஸ்





‘‘சம்மர் கோச்சிங் கிளாசுக்கு பேரன்ட்ஸ் ஜோடி ஜோடியாப் போறாங்களே... ஏன்?’’
‘‘பிள்ளைகளை எந்தெந்த சம்மர் கோர்ஸில் சேர்க்கலாம்னு பேரன்ட்ஸ்களுக்கு கிளாஸ் எடுக்கிறாங்களாம்...’’
- சரவணன், கொளக்குடி.

‘‘உங்க ஜாதகத்துல நாலஞ்சு கட்டம் காலியா இருக்கே தலைவரே..?’’
‘‘அதில நிக்க வைக்க வேட்பாளர்கள் கிடைக்கலையே ஜோசியரே..!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா தலைவர் என்ன தெரிஞ்சுக்க விரும்பறார்..?’’
‘‘நடிகை த்ரிஷாவின் திருமணம் தள்ளிப் போவது ஏன்னு தெரிஞ்சிக்கணுமாம்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

ஆளில்லாத ரயில்வே கேட்டை கிராஸ் பண்றதும், அழகான பெண்ணை கிராஸ் பண்றதும் தற்கொலைக்கு சமம்!
- கிராஸிங்கை தடுப்போர் சங்கம்
- உமா ராஜேந்திரன், காரைக்கால்.

‘‘தலைவர் உரையைக் கேட்க வந்திருக்கற பெண்கள் அழறாங்களே... ஏன்?’’
‘‘வீட்ல இருந்தா சீரியல் பார்த்திருக்கலாமேன்னு நினைக்கறாங்க போல!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘என்னங்க இது... உங்க சம்சாரத்தைப் பார்த்ததும் ஓடிப் போய் தோசை சுடுறீங்களே..?’’
‘‘வீட்டுல ‘கண்டதும் சுட’ உத்தரவு போட்டுருக்கா...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘போலீஸ் அடிச்சப்ப, ஏன் தலைவரே சத்தம் போடலை..?’’
‘‘அவங்க அடிச்சதே சத்தம் போட்டதுக்குத்தானே..!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.