ஜோக்ஸ்





‘‘ஒரு முறையாவது, யாரோட ஆதரவும் இல்லாம தனியா நிக்கணும்னு தலைவருக்கு ஆசையாம்...’’
‘‘தேர்தல்லயா..?’’
‘‘இல்ல... டாஸ்மாக்ல!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

என்னதான் வெயில் காலமா இருந்தாலும், இரண்டு பேருக்
குள்ள மனஸ்தாபம் வந்திருச்சுன்னா அதை ‘பனிப்போர்’னு
தான் சொல்வாங்க. ‘வெயில் போர்’னு சொல்லமாட்டாங்க!
- உச்சி வெயிலில் உச்சகட்ட தத்துவம் சொல்லி மண்டை
காய வைப்போர் சங்கம்
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘சாரி... உங்க ரத்தத்துல ஆல்கஹால் கலந்திருக்கிறது கன்பார்ம் ஆயிடுச்சு!’’
‘‘அப்படியே நான் அடிச்ச சரக்கு ஒரிஜினலா, இல்லையான்னு கன்பார்ம் பண்ணிடுங்க டாக்டர்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘டாக்டருக்கு மெமரி லாஸ் ஆனதால நீ பிழைச்சியா...?’’
‘‘ஆமாம்... எனக்கு ஆபரேஷன் பண்ண மறந்திட்டாரு!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

‘‘இந்த கிரிக்கெட் கிரவுண்டுல மட்டும் சியர்கேர்ள்ஸ் பக்கத்துல மூணு கிழவிங்க உட்கார்ந்திருக்காங்களே... ஏன்?’’
‘‘பேட்ஸ்மேன் அவுட் ஆகிட்டா ஒப்பாரி பாடறதுக்காம்...’’
- சரவணன், கொளக்குடி.

‘‘நம்ம கட்சி ஆரோக்கியமா இல்லையே...’’
‘‘இப்பவாச்சும் புரிஞ்சுக்குங்க தலைவரே, உங்களுக்கு வழங்கியது போலி டாக்டர் பட்டம்னு..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘தலைவர் ஆர்வமா குற்றப்பத்திரிகையை புரட்டறாரே... ஏன்?’’
‘‘நடுநடுவுல நடிகைங்க கவர்ச்சிப்படம் போட்டு இருக்கும்னு யாரோ அவர்கிட்ட சொல்லியிருக்காங்க...’’
- தென்றல் நாசர், சங்ககிரி.