தத்துவம் மச்சி தத்துவம்




‘‘கல்யாண மண்டபத்துல எதுக்கு ஏகப்பட்ட அடியாட்கள் சுத்தறாங்க..?’’
‘‘மொய் பணம் வசூலிக்கத்தான் இந்த ஏற்பாடு..!’’
 லலிதா செல்லப்பா, சென்னை75.

‘‘ஊழல் வழக்குல தலைவர் வீட்டு நாயோட பேரையும் ஏன் சேர்த்திருக்காங்க..?’’
‘‘ஊழல் பணத்துலதான் தலைவர் அந்த நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போட்டாராம்..!’’
 வி.சாரதி டேச்சு, சென்னை5.

‘‘தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தாதாவா இருந்திருக்கலாம்... அதுக்காக இப்படியா?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வேணுமாம்!’’
 பா.ஜெயக்குமார், வந்தவாசி.

என்னதான் பேர்ல முட்டை இருந்தாலும், முட்டைக்கோஸ் அசைவம் ஆகாது!
 விலைவாசி உயர்வில் அசைவம் வாங்க முடியாமல் சைவமானோர் சங்கம்
 பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘அமைச்சரே, எதிரி மன்னன் நம் மகாராணியாரின் உருவப்படத்தைக் கேட்கிறான்... எதற்காக இருக்கும்?’’
‘‘நம்மீது படையெடுத்து வருவதா, வேண்டாமா என்று முடிவெடுப்பதற்காக இருக்கும் மன்னா..!’’
 சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

‘‘கூட்டத்துக்கு தலைமை தாங்க வந்த தலைவர் ஏன் கண்கலங்கறாரு..?’’
‘‘நாலு பேரை எதிர்பார்த்த இடத்தில் நாற்பது பேரை பார்த்ததுல வந்த ஆனந்தக் கண்ணீராம்..!’’
 த.வெற்றிவேல், சென்னை53.

ஒருத்தர் என்னதான் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ‘கோச்’சா இருந்தாலும், அவரை ஒரு ரயில் எஞ்சினில் மாட்டி விட்டெல்லாம் ஓட வைக்க முடியாது.
 உட்கார்ந்தபடியே கருத்துச் சொல்லி ஓட வைப்போர் சங்கம்
 கி.ரவிக்குமார், நெய்வேலி.