அனுஷ்கா அட்டாக்!





‘338 கிராமங்களைக் காணவில்லை!’ கட்டுரை அதிர்ச்சியின் எல்லைக்கே இழுத்துச் சென்றது. கிராமங்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தின் ஜீவநாடி என்பதை அரசு உணர வேண்டும்.
 தாராபுரம் தமிழ், சென்னை78;மா.மாரிமுத்து, ஈரோடு.

வாழ்க்கையின் முக்கியமான உறவுகள் நிச்சயமற்றுப் போவதும், அன்றாட வாழ்க்கையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட எளிய உறவுகள் ஆழமான பிணைப்புகளை உருவாக்குவதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை என்கிற வாழ்க்கைச் சித்திரத்தை மனுஷ்ய புத்திரன் வரைந்திருந்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.
 கவியகம் காஜூஸ், கோவை24.

அன்று அரிவாள் என்ற ஆயுதம் எடுத்த மதுரை ரமேஷ், இன்று பேனா எனும் ஆயுதத்தை எடுத்து பல புத்தகங்களை எழுதி ‘புதிய பாதை’க்கு திரும்பியுள்ளதை படிக்கும்போது சந்தோஷமாக இருந்தது.
 லட்சுமி செங்குட்டுவன், வேலூர்; த.ஜெகன், சரலூர்.

‘ராணி ருத்ரம்மா தேவி’ படத்துக்காக அனுஷ்கா 15 கிலோ எடை குறைத்துள்ளார் என்ற சேதியைப் படித்து ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சு. பழையபடி எடையைக் கூட்டி எங்களுக்கு கவர்ச்சி தரிசனத்தை கொடுங்க தாயீ!
 ஏ.டி.சார்லஸ், திருப்பூர்.

‘நாடி துடிக்குதடி’ படத்தில் தானே இசையமைத்து பாடலில் நடிக்கும் இசைஞானி இளையராஜாவை ‘நாடி’, அவரிடம் பேட்டியெடுத்து வெளியிட்டது சூப்பர். புதுராகம் படைக்கும் இறைவனின் பேட்டி அற்புதம்.
 வெ.குணசேகரன், கடலூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மு.ஸ்ரீராம், திருவிடைமருதூர்.

விஷாலின் ‘ஓபன் டாக்’ என்று அவரது பேட்டியைப் பிரசுரித்து விட்டு, எல்லா பக்கங்களையும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா படங்களாக நிரப்பியிருப்பது உமது சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

மதுரை சுந்தரம்பட்டியில் உள்ள ‘பிரெய்லி’ பள்ளியில் 18 வருடங்களாக பத்தாம் வகுப்பில் எல்லா தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது. உண்மையிலேயே படிப்புக்கு பார்வை என்றும் தடையில்லை என்பதற்கு இந்த பள்ளியே ஒரு உதாரணம்.
 நா.விஜயா, கும்பகோணம்.

விக்கிற விலைக்கு தங்கம் கூட வாங்கிடலாம்... ஒரு செங்கல்லைத்தான் வாங்க முடியாது. ஆனால் செங்கல்லும் இல்லாமல் செலவும் இல்லாமல் சூப்பர் பில்டிங்கா? ஆச்சரியமான கட்டுரை!
 எஸ்.மேகலா ராஜன், ராஜபாளையம்.

17.6.2013 குங்குமம் இதழில் வெளியான ‘காய்கறி விலை எப்போது குறையும்?’ கட்டுரையில், ‘அரசே வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து மலிவுவிலை காய்கறிக் கடைகளை திறக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த யோசனையை ஏற்று முதற்கட்டமாக 31 இடங்களில் மலிவுவிலை காய்கறிக்கடைகளை திறந்திருக்கிறது தமிழக அரசு. ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கி பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ‘குங்குமம்’ இதழின் பணி தொடரட்டும்.
 செல்வபாரதி,திருவண்ணாமலை.

ஆசிரியர் பிரிவு முகவரி:
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை600004.
தொலைபேசி: 42209191 தொலைநகல்: 42209110
மின்னஞ்சல்:editor@kungumam.co.in 
படைப்புகளை தபாலிலும் அனுப்பலாம். மின்னஞ்சல் செய்ய:  editor@kungumam.co.in
வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள்:
twitter.com/Kungumammagazine
facebook.com/Kungumammagazine

சந்தா விவரங்களுக்கு:
தொலைபேசி: 42209191 Extn 21120
மின்னஞ்சல்:subscription@kungumam.co.in
விளம்பரங்களுக்கு:தொலைபேசி: 44676767 Extn 13234.
மின்னஞ்சல்:advts@kungumam.co.in