ஜோக்ஸ்





‘‘தலைவர் விலங்குகளை நேசிக்கிறவர்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘அவரை இதுவரை கைது செஞ்சப்ப போட்ட விலங்குகளை எல்லாம் தன் வீட்டு ஷோகேஸ்ல அடுக்கி வச்சிருக்காரே...’’
 பர்வீன் யூனுஸ், சென்னை44.

‘‘என்ன மாப்ளே... பொண்ணு கூட தனியா பேசணும்னு போயிட்டு உடனே திரும்பி வந்துட்டீங்க?’’
‘‘பொண்ணு, அவ பாய் ஃபிரண்ட் கூட செல்லுல பேசிக்கிட்டிருக்கு!’’
 சரவணன், கொளக்குடி.

‘‘நம்ம தலைவர் பேசறது ஒண்ணு... செய்யறது ஒண்ணா... எப்படி?’’
‘‘பிரதமரை எதிர்ப்போம், குரல் கொடுப்போம்னு பேசுறாரு. அப்புறம், ‘வாயில்லாத ஜீவனை இம்சிக்கக் கூடாது’ன்னும் சொல்றாரு!’’
 ஆர்.தங்கராஜ், திருப்பூர்.

‘‘அவர் போலி வாஸ்து நிபுணர்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘வாஸ்துப்படி, வீட்டோட வாசல் வானம் பார்த்து இருக்கணும்னு சொல்றாரே..!’’
 கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘நம்ம டான்ஸ் போட்டிக்கு ஒரு நிஜ நீதிபதியை நடுவரா போட்டது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘போட்டி முடிஞ்சதும் முடிவைச் சொல்லாம, ‘தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்த¤ வைக்கப்படுகிறது’ன்னு அறிவிச்சுட்டாரே..!’’
 சம்பத்குமாரி, திருச்சி.

தங்கத்தை விதம்விதமா அணிகலன் செஞ்சு மாட்டிக்கலாம்; ஆனா ‘ஆதங்கத்தை’ அப்படியெல்லாம் அணிய முடியாது!
 தங்கம் விலையேறுவதை நினைத்து ஆதங்கப்படுவோர் சங்கம்
 பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் நாம மேம்பாலம்னு சொன்னாலும், அது தரையில தான்யா நிக்குது!
 மேம்பாலத்துக்குக் கீழே குட்டித் தூக்கம் போடுவோர் சங்கம்
 பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.