குட்டிச்சுவா சிந்தனைகள்! : ஆல்தோட்ட பூபதி





மனைவி, குழந்தைகளுக்கு புதுத் துணி எடுத்துக் கொடுத்துட்டு உங்களுக்காக பனியன், ஜட்டி மட்டும் வாங்கிக் கொண்ட அப்பாமார்களே! தீபாவளி அன்னைக்கு பலகாரம் செய்யறேன், பூரி செய்யறேன்னு சமையலறையில் மல்லுக்கட்டி, புதுப் புடவைய கட்ட முடியாத அம்மாமார்களே! 50 ரூபா கொடுத்து ஆட்டோல போகாத அப்பாவுக்கு பொறந்து, 500 ரூபா கொடுத்து படம் பார்த்த அண்ணன்மார்களே! 1000 ரூபாவுக்கு ரெண்டு சுடி எடுக்கலாமா... இல்ல, 2000 ரூபாவுக்கு ஒரு சுடி எடுக்கலாமான்னு ரெண்டு வகையாவும் டிரஸ் எடுத்த அக்காமார்களே! ஐயோ ஸ்கூலுக்கு போகணுமேன்னு அதிர்ச்சியாகும் தம்பிமார்களே! ஸ்கூலுக்கு போயி புது டிரஸ காட்டலாம்னு குஜாலாகும் தங்கைமார்களே! இன்னுமும் வெடி வாங்கணும்னு அடம்பிடிச்சி அம்மா அப்பாகிட்ட அடி வாங்கின
சிறுசுகளே! தீபாவளி சனிக்கிழமை வந்ததால மெகா சீரியல் தப்பிச்சுடுச்சுனு சந்தோஷப்படும் பெருசுகளே! பள்ளிக்கூடம் போகும் குழந்தைகளே! பால் குடி மறவா மழலைகளே! உங்கள் அனைவருக்கும் குட்டிச்சுவர் என்ன சொல்ல வருதுன்னா...
இந்த தீபாவளி மாசத்தின் முதல் வாரமே வந்துட்டதால, எல்லாரும் கைக்காச செலவு பண்ணியிருப்பீங்க. அதனால மிஞ்சி இருக்கிற கொஞ்ச நாளும் கவனமா செலவு பண்ணணுங்க. இல்லன்னா, இந்த தடவை மாசம் முழுக்க இருக்கிற வாரமெல்லாம் மாசக் கடைசி வாரமாயிடும்.

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது? பள்ளிக்கூடத்துல என்கூட படிக்கிறப்ப இங்கிலீஷ் நோட்டு எது, சயின்ஸ் நோட்டு எதுன்னு தெரியாதவனுங்க எல்லாம் இப்போ சாம்சங் நோட்டோட சுத்தறான். றிமீஷீஜீறீமீளையும் றிuஜீவீறீலையும் ஒரே மாதிரி சொன்னவன், இன்னைக்கு ஆப்பிள் ஐபோனோட அலையுறான். தடுப்பூசி போட பயந்துக்கிட்டு பள்ளிக்கூடத்த விட்டு ஓடுனவன், இன்னைக்கு பாக்கெட்டுக்கு ஒரு டேப்லெட் வச்சுக்கிட்டு அலையுறான். வீட்டு ஹால விட பெருசா இருக்கு செவுத்துல இருக்கிற லிணிஞி டி.வி.
இவனுங்க சுமாரா இருந்தாலும், போனு, லேப்டாப்பு, டேப்லெட்டுன்னு பயன்படுத்தற டெக்னாலஜி ஸ்மார்ட்டா இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது மக்களே? இன்னைக்கு நாட்டுல
படிப்பையும் உழைப்பையும் பயன்படுத்தினா காசு சம்பாதிக்க முடியாது... படிச்சவனையும் உழைப்பவனையும் பயன்படுத்தினாத்தான் காசு சம்பாதிக்க முடியும்!

‘‘தம்பி, நீ குடுக்குற பத்து ரூபாய்க்கு எப்படிப்பா ஒரு கிலோ ஆப்பிள் வரும்?’’
‘‘அண்ணே, அது பத்து ரூபா இல்லண்ணே... ஒரு சைபர் அழிக்கப்பட்ட 100 ரூபா நோட்டு!’’
‘‘என்னா சார், இவ்வளவு டீசன்ட்டா இருக்கீங்க, மிஸ்டு காலா தர்றீங்க?’’
‘‘அது மிஸ்டு கால் இல்லைங்க சார், அளவு குறைக்கப்பட்ட ஃபுல் ரிங்!’’
‘‘என்னங்க... 7 ரூபா வாங்குறீங்க, ஆனா டீ அரை கிளாஸ்தான் இருக்கு?’’
‘‘அது அரை மடங்கு நிரப்பப்பட்ட காலி டம்ளர் சார்!’’
‘‘என்னடி இது... சாம்பாருல சக்கரைய போட்டு வச்சிருக்க?’’
‘‘அது சக்கரை இல்லங்க, இனிப்பு சேர்க்கப்பட்ட உப்பு!’’
‘‘டேய்ய்ய், என்னடா க்ளாஸ் ரூம்ல பாடம் நடத்துறப்ப தூங்குனியாம்?’’
‘‘அது தூக்கம் இல்லப்பா, மிஸ் பாடம் நடத்துனத கண்ண மூடி மனசுல ஒப்பிச்ச தியானம்!’’
‘‘என்னய்யா, பூந்தொட்டிய தலைக்கு வச்சுக்கிட்டு டூ வீலர் ஓட்டுற?’’
‘‘இது பூந்தொட்டி இல்லைங்க சார், செடிகள் நீக்கப்பட்ட ஹெல்மெட்...’’
‘‘யோவ்வ்... என்னாது இது? தேங்காய் சட்னின்னு மறுபடியும் புதினா சட்னியே வைக்கறீங்க?’’
‘‘சார், அது புதினா சட்னி இல்ல. பச்சை தண்ணி வச்சு அரைச்ச தேங்கா சட்னி!’’
‘‘என்னங்க, டைம் என்னாச்சு தெரியுமா... இவ்வளவு லேட்டா வர்றீங்க?’’
‘‘நான் இன்னைக்கு லேட்டா வரலம்மா, நாளைக்கு வர்றதுக்கு கொஞ்சம் அட்வான்ஸா வந்துட்டேன்...’’
- என்ன பாக்குறீங்க? இரட்டை இலை சின்னம், உயர்த்தப்பட்ட குதிரை றெக்கையாகவும் இயற்கை காட்சியாகவும் மாறும்போது, இனி இப்படித்தான் பொதுமக்களும் சமாளிஃபிகேஷன் செய்வாங்க. ஏன்னா, அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி!


என்னடா ஆறு மாசமா இந்தியாவுல எங்கேயும் குண்டு வெடிக்கலன்னு நினைச்சேன், கரெக்டா தீபாவளிய தீவிரவாதிங்க குண்டு வெடிச்சு கொண்டாடிட்டாங்க. இன்னமும் ரெண்டு, மூணு நாளுல, பாட்னா குண்டு வெடிப்புக்கு இவங்கதான் மூளை, கிட்னி, லிவர்னு எப்படியும் நாலஞ்சு பேரோட வரைபடத்த போடத்தான் போறாங்க. ஆனா, நான் சொல்ல வர்ற மேட்டர் வேற. இது ஆண்களின் கௌரவம் சம்பந்தப்பட்டது.

பாட்டியோட பல் செட் தொலைஞ்சு போனதிலிருந்து, பாட்னால குண்டு வச்சது வரை... எப்ப பார்த்தாலும் ஆம்பளைங்க மேலயே சந்தேகப்படுறீங்களே, ஆம்பளைங்க மட்டும்தான் தப்பு செய்வாங்களா? இல்ல, அவங்கதான் இளிச்சவாயங்களா? அட குண்டுவெடிப்ப கூட விடுங்க சார்... அட்லீஸ்ட் என்னைக்காவது பொம்பளைப் புள்ளைங்க டூ வீலர்ல ட்ரிபுள்ஸ் போறப்ப போலீஸ்காரர் புடிச்சிருக்காரா சார்? என்னைக்காவது பொண்ணுங்ககிட்ட லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் டிராஃபிக் போலீஸ் கேட்டுப் பாத்திருக்கீங்களா சார்? இதையெல்லாம் விடுங்க... உங்க வாழ்நாளுல ஒரு தடவையாவது போலீஸ் பொண்ணுங்கள வாய ஊதச்சொல்லி அவமானப்படுத்தி பாத்திருக்கீங்களா? இல்லைல்ல! அப்புறம் ஆம்பளைங்கன்னா மட்டும் என்ன சார் அப்படி ஒரு சந்தேகம்? அப்படி ஒரு இளக்காரம்?
பெத்தவங்களுக்கு பயப்பட்டு, தன் குழந்தைங்கள பெத்த பொண்டாட்டிக்கு பயப்பட்டு, தான் பெத்ததுக்கும் பயப்படுறவன்தான் சார் ஆம்பள! பாவம் சார், புள்ளப்பூச்சி. கடைசியா ஒண்ணு கால புடிச்சு சொல்லிக்கிறேன்... ஆம்பளைங்க தப்பு பண்ணுவாங்க சார்; அதுக்காக தப்பு பண்றவங்க எல்லாம் ஆம்பளைங்க இல்ல. மைண்ட் இட்!


தமிழ்நாட்டுல தெருவுக்கு தெரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கோ, இல்லையோ... ஒரு பேக்கரி இருக்கு. அதுவும் ஆரம்பிக்கிறவன் எல்லோரும் எப்படிய்யா அய்யங்கார் பேக்கரின்னே ஆரம்பிக்கறீங்க? ராஜம் அய்யங்கார் பேக்கரி, சோமு அய்யங்கார் பேக்கரி, மகாலட்சுமி அய்யங்கார் பேக்கரின்னு வச்சீங்க... ஓகே! அதுக்கப்புறம் ஒரு படி மேல போயி, சச்சின் அய்யங்கார் பேக்கரி, தோனி அய்யங்கார் பேக்கரின்னு வச்சீங்க... ஓகே! இப்ப எங்கூர்ல ரெண்டு பேக்கரி வந்திருக்கு, பேரு அப்துல் அய்யங்கார் பேக்கரி - அந்தோணி அய்யங்கார் பேக்கரி!

இவங்கதான் இப்படின்னா, நேஷனல் ஹைவேல இருந்து தார் மறைஞ்சு போன ரோடு வரை எல்லாத்துலயும் ஒரு கும்பகோணம் காபி கடை இருக்கு, ஆஸ்திரேலியாகாரன் கோடிக்கணக்குல முதலீடு போட்டு ரிதிசின்னு நடத்துனா, இவிங்க செம்பு டம்ளர்ல பத்து ரூபாக்கு காபி கொடுக்க, அதே ரிதிசிங்கிற எழுத்த போடறாங்க. கேட்டா, இந்த ரிதிசிக்கு அர்த்தம் ‘கும்பகோணம் ஃபில்டர் காபி’யாம்... அவ்வ்வ்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
மக்களை பற்றி எண்ணாம, மத்தியப்பிரதேசத்தில் தன்னை 25000 கொசுக்கள் கடிச்சுதுன்னு கொசுக்கள எண்ணிக்கிட்டு இருக்க ராகுல்ஜி!