தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் ஏன் பிரசாரத்துக்குப் போகும்போது செக் புக் எடுத்துட்டுப் போறாரு..?’’
‘‘பணம் கொடுக்கக்கூடாதுங்கிற தேர்தல் விதியை மதிக்கறாராம்..!’’
- பி.நந்தகுமார், காங்கேயம்.

‘தலைவர் இன்னும் ஜெயில் ஞாபகத்துலயே இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கூட்டணியல தொகுதிப் பங்கீடு விஷயமா பேசும்போது, ‘வேலூரையும், பாளையங்கோட்டையையும் என்னாலே விட்டுக்கொடுக்க முடியாது’ன்னு சொல்றாரே..!’’
- எஸ்.கோபாலன்,
நங்கநல்லூர்.

‘‘கூட்டணி கட்சியோட தேர்தல் உடன்பாடு முறிஞ்சிருச்சா... ஏன் தலைவரே?’’
‘‘அவங்க ஜனாதிபதி பதவியை தங்களுக்கு ஒதுக்கணும்னு கேட்டாங்களே..!’’
- இரா.பாஸ்கர், சென்னை-88.

பீட்ரூட்டை வச்சு கூட்டு செஞ்சு போடலாம்; அதை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?
- தத்துவம் சொல்லியே காய்களைக் கனிகளாக்குவோர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘தலைவர் கேட்ட நாலு தொகுதிகளை கொடுத்தும் ஏன் இப்படி நொந்து போய் இருக்கிறார்..?’’
‘‘நாலு வேட்பாளர்களையும் சேர்த்துக் கொடுத்துட்டாங்களாம்... அதான்!’’
- தேவதாசன், சொக்கம்பட்டி.

என்னதான் உபயோகமில்லாத ஒரு தபாலை ஒருத்தர் அனுப்பியிருந்தாலும் அதையும் போஸ்ட்மேன் ‘சார்... போஸ்ட்!’னு சொல்லித்தான் கொடுப்பார். ‘சார்.... வேஸ்ட்’னு சொல்ல மாட்டார்!
- ஃபேஸ்புக்கில் வேஸ்ட்டாக போஸ்ட் போடுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எனக்கு மட்டும் ஏன்யா நைட்ல குற்றப் பத்திரிகை வருது..?’’
‘‘அது பூரா நீங்க இரவுல செஞ்ச குற்றங்களுக்கானது தலைவரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116