போணி வாணி!



‘மெகா சீரியல்தானே... எப்படி எடுத்தாலும் பார்ப்பார்கள்’ என மெத்தனம் காட்டாமல், 1000வது எபிசோடில் நேரடி ஒளிபரப்பு என்ற புதுமையைச் செய்து கின்னஸில் இடம்பிடித்த ‘நாதஸ்வரம்’ டீமுக்கும் சன் டி.விக்கும் நல்வாழ்த்துகள்!

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

சோலார் பவர் மூலம் நாமே அரசுக்கு மின்சாரம் தயாரித்துக் கொடுக்கலாம் என்பது இனிப்புத் தகவல். ஆனால், சோலார் பேனல் அமைக்க மானியம் போக மக்களுக்குத் தேவைப்படும் பாதிப்பணத்தை வங்கிகள் கடனாகக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்!
- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61.

கண்ணியமான, உணர்வு பூர்வமான படைப்பிலக்கியத்திற்கு சொந்தக்காரர் எம்.டி.வாசுதேவன் நாயர்! அவரது நேர்முகமும் மிக நேர்மையாகப் பரிமளித்தது.
- ஆர்.கே.லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

கவர்ச்சி நடிகைகளின் அடுத்த ஸ்டெப், அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்தானே? அதை விட்டுட்டு நமீதா அரசியல் பக்கம் போறதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம். எங்களை எல்லாம் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?
- வி.விஷால், புதுச்சேரி.

தானே ஒரு கலையை உருவாக்கி, செம்மைப்
படுத்தி, இன்று ‘கலக்கல் கண்ணாடிச் சிற்பங்கள்’ செய்ய பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் ஸ்ரீநிவாச ராகவன் நிஜமாகவே கிரேட்!
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.

வைக்கம் விஜயலட்சுமியின் குரல் மென்மை ரசிக்க வைத்தாலும் அவரது உள்ளத்தின் உறுதி வியக்க வைக்கிறது. உடலில் சில குறை இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ‘மாற்றுத் திறன்’ இருக்கும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு!
- எம்.பர்வீன் பாத்திமா,  சென்னை-91.

பொதுவாக நடிகர்கள் தம்முடைய சம்பளத்தோடு பேச்சு வார்த்தையை முடித்துக் கொள்வார்கள். ஆனால், ‘தல’ அஜித், இயக்குநர் கௌதம் மேனனுக்கும் சம்பளம் பேசியிருப்பது, அவரின் கொடுத்து வாழும் குணத்தைத்தான் காட்டுகிறது!
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

‘கோச்சடையான்’ பாடல் வரிகள் வைரங்களாக ஜொலிக்கின்றன. அதிலும், ‘பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே... அந்தப் பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே...’ என்ற வரிகள் காலத்தால் அழியாதவை!
- எம்.விக்னேஷ்குமார், கோபி.

‘ஆஹா கல்யாணம்’ படம் சரியாக போணியாகாவிட்டாலும் அதன் ஹீரோயின் வாணி கபூர் தமிழ் முன்னணி நடிகர்கள் மனதில் போணியாகிட்டாரே...
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘ஆன்லைன்’ மூலம் எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தரும் சகோதரி பிரியா கிருஷ்ணனுக்கு ஆசி. சரியோ, தவறோ தயங்காமல் பேசத் தொடங்கினால்தான் ஆங்கிலம் சாத்தியம் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்தான்.
மா.மாரிமுத்து, ஈரோடு.