facebook வலைப்பேச்சு



திருமணம் ஆகாமலேயே, குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே, சம்பாதிக்க ஆரம்பித்ததுமே அப்பா ஸ்தானம் வந்து விடுகிறது குடும்பத்தின் தலைச்சன் ஆண்மகனுக்கு.
- பரிமேலழகன் பரி

உலகில் மேலும் பல கோடி ஆண்கள் இருக்கிறார்கள் என்பதே காதலில் விழும் பெண்ணிற்கு மறந்து விடுகிறது.
இது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா.
- சரவ் யுவர்ஸ்
உறக்கத்தை வேட்டையாடி புசிக்கும் கனவின் முடிவில் நாமே வென்றவனும் தோற்றவனுமாகிறோம்.
- மாஸ்டர் சிவா

எந்த முனிவரின் சாபத்தினால், கடவுளெல்லாம் கல்லாகின கோயில்களில்?
- பனிமலர் வைத்தி

ஒரே தொகுதிக்கு ரெண்டு வேட்பாளர்களை நிறுத்திய கூட்டணியைப் பார்த்த கடைசி தலைமுறை நாம்!
- வா.வேல்குமார்
உள்ளங்கை சகதியாக்கிய
களிமண்
உருமாறி சிதைவதைப் பார்த்து
கண்ணீர் சிந்த அழுதான்
கைபிடித்திருந்த குழந்தை.
உருட்டிப் பிடித்த கைகளுக்குள்
பெருமழைக்கு முன்னர்
சிறுகுச்சி ஒடித்துக் கீற,
கண் திறந்த கடவுள்
காணாமல் போனதற்கு.
- கொ.மா.கோ.இளங்கோ

ஒற்றைத் துளசியை ஈரிழை இடையே சூடியதை விடவா ஒரு கூடைப் பூக்கள் செய்திட முடியும்?
- ராமச்சந்திரன் புதுமணப்பள்ளி

புல்லாங்குழல் விற்பவன் ஊதுகிறான், தன் பசியையும் சேர்த்து!
- மன்னை முத்துக்குமார்

வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் குறித்து யாரும் கூற முடியாத தத்துவங்களை ஒருவேளை உண்ணா நோன்பு உணர்த்தி விடுகிறது.
- விஜயலட்சுமி

நீங்கள் தனியாக இருக்கும்போது எதைச் செய்கிறீர்களோ, அதற்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்...
- சரவ் யுவர்ஸ்

ஒரு புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
- அனிதா ராஜ்

குஸ்காதான் பார்சல் கேட்டேன்... ஆனா லெக் பீஸோட சிக்கன் பிரியாணி பார்சல்ல இருக்கு.
# கடவுள் இருக்கான் கொமாரு!
- ஃப்ராங்க்ளின் டெனி

கண்ணாடியைப் பார்க்கும்போது வரும் டயட் கன்ட்ரோல், சாப்பாட்டைப் பார்க்கும்போது ஏனோ வருவதில்லை.
- அருணா ராஜ்

கல்யாணம் ஆகாத வாலிபர்கள் இருக்கும் வரை, புரோக்கர்கள் செல்வச் செழிப்பில் மிதந்து கொண்டேதான் இருப்பார்கள்...
- மிராக்கிள் வெங்கி

twitter வலைப்பேச்சு

@ThirutuKumaran   
நில்! கவனி! பின்னாடியே செல்!
# அழகு பெண்களைக் கண்டால்...

@ThirutuKumaran   
நில்! கவனி! பின்னாடியே செல்!
# அழகு பெண்களைக் கண்டால்...

@alexxious  
மௌனத்துடன் உரையாடத்
தெரிந்தவனுக்கு
பூ பூக்கும்
ஓசையும்
கேட்கும்!!!

@Senthilbds   
குறைகுடம் எனக்கூறி கல்லெறிந்து கொண்டே இருந்தனர், ஒரு கட்டத்தில் எறிந்த கற்களைக் கொண்டு நிரம்பத் தொடங்கியது அக்குடம்.