குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஆட்கள் தேவை

தமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்றத் தொகுதிகளில் நிற்க நல்ல திடகாத்திரமான 40 ஆட்கள் தேவை. அடி தாங்கக்கூடிய உடம்பும், இடி தாங்கக்கூடிய மனமும் இருக்க வேண்டியது அவசியம். கொடும்பாவி எரிப்பதிலும், வேட்டி கிழிப்பதிலும் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். திருச்சி போங்கிரஸ் கூட்டத்தில் கும்பல் காட்ட கூட்டியவர்களுக்கு தரப்பட்ட பிரியாணியில் மிச்சம் இருப்பவை இரண்டு வேளை உணவாகத் தரப்படும். உறங்க சத்தமூர்த்தி பவன் கார் பார்க்கிங் ஏரியா ஒதுக்கப்படும். உடுத்த இரும்பாலான காம்ராஜ் வேட்டிகள் இலவசம். தேர்தல் முடியும் வரை தினசரி பேட்டாவாக 40 ரூபாய் வழங்கப்படும், தொகுதி நல நிதியாக நாற்பது ரூபாயிலிருந்து தொகுதிக்கு ஒரு ரூபாய் மட்டும் பிடுங்கப்படும்.

அணுக வேண்டிய முகவரி:
பூனகேசிகன்
தமிழக போங்கிரஸ்,
சத்தமூர்த்தி பவன்,
ரத்த பூமி குறுக்கு தெரு,
சென்னை - 600040.

குண்டூசி விக்கிறவன் கோணி ஊசி விக்கிறவனெல்லாம் தொழில் அதிபருங்கிற மாதிரி, இப்போ பல சேனல்களில் பவுடர் அடிச்சா பொம்பளைங்க எல்லாம் நாட்டாமைன்னு சொல்லிக்கிட்டு நடு ஹால்ல உட்கார்ந்துக்கிட்டு பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. டி.வில காட்டுறோம், பிரச்னைக்கு தீர்வு சொல்றோம், பணம் தர்றோம்னு என்னென்னவோ சொல்லி கூட்டிக்கிட்டு வந்து பல வருஷம் இழுக்கிற அடுத்தவன் குடும்ப பிரச்னைகளுக்கு நீங்க தீர்ப்பு சொல்றீங்களே... ஏன்? உங்க சொந்தக்காரன் எவன் குடும்பத்துலயும் பிரச்னை இல்லையா? அவனக் கூட்டியாந்து கொஞ்ச நேரம் பஞ்சாயத்து பண்ணுங்களேன்.

அதெப்படி, எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும், நிகழ்ச்சி ஓடுற அந்த ஒரு மணி நேரத்துக்குள்ள தீர்ப்ப வழங்கிடுறீங்க? நீங்க கட்டுற புடவை விலைய, பல மாசம் சம்பளமா வாங்கும் இந்த எளிய மக்களை கூட்டியாந்து ஏம்மா கொடுமைப்படுத்துறீங்க? நீங்க அடிக்கிற சென்ட் வாங்கணும்னா, உங்க நிகழ்ச்சிக்கு வர்றவங்க ரெண்டு மாசம் கூலி வேலைக்குப் போகணும்மா. உங்களுக்கு விளம்பரத்துல வர்ற பணம் முக்கியமில்ல...

நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி முக்கியமில்ல... உண்மையாலுமே அடுத்தவன் கஷ்டத்துக்கு தீர்வு சொல்லணும்னா, சாதா கோர்ட்டுல இருந்து சுப்ரீம் கோர்ட்டு வரை நாட்டுல தேங்கிக் கிடக்கிற கோடிக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு சொல்லுங்க! ரெண்டு மாநில முதல்வர்கள கூட்டியாந்து காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்க! ரெண்டு நாட்டு பிரதமர கூட்டியாந்து பாகிஸ்தான் பார்டர் பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்க! அத விட்டுட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழி தெரியாதவங்களைக் கூட்டியாந்து, அவன் கஷ்டத்த காமிச்சு... என்ன கொடும இது?

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டுன்னு சொல்லியிருக்கார் அகில உலக விஞ்ஞானி ஐசக் நியூட்டன். நம்மூரு ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு அப்புறம், இந்த உலகமே அறிவுஜீவின்னு ஒத்துக்கிட்டது இந்த நியூட்டன் அய்யாவதான். இதுல பாருங்க... அவரு சொன்னது இந்தத் தேர்தல் நேரத்துல அப்படியே பலிக்குது. இப்போ நம்ம கேப்டன் பிரசாரத்த ஆரம்பிச்சிருக்காரு... உடனே, எங்க நம்ம தலையில கொட்டிடுவாரோன்னு ஹெல்மெட் விற்பனை அதிகமாயிடுச்சுல்ல.

இந்தா பாருங்க, அண்ணன் மைகோ பிரசாரத்த ஆரம்பிச்சாரு... உடனே கால் வலி, மூட்டு வலி தைலம் விற்பனை அதிகமாயிடுச்சுல்ல. நம்ம சிவப்புத் துண்டு தோழர்கள் தனித்துப் போட்டின்னு தம் கட்டுன உடனே, மண் உண்டியல்ல இருந்து இரும்பு உண்டியல் வரை விற்பனை படு ஜோரா நடக்குதுல்ல. இதெல்லாம் என்னா வியாபாரம்? நம்ம போங்கிரஸ் கும்பல் மட்டும் பிரசாரத்த ஆரம்பிக்கட்டும்... சிரிச்சு சிரிச்சு நமக்கு வயிறு வலிக்கும்ல, அதுக்கான மாத்திரை சேல்ஸ் எப்படி எகிறப் போகுது பாருங்க.

தேசிய டிராமா கூட்டணி கட்சிகள் தொகுதி பிரித்தது எப்படி? நேரடியாகச் சென்று படம் பிடித்து விளக்குகிறார் நமது சிறப்பு நிருபர்...
போன வாரத்தில் ஒரு நாள்...
பழ.கணேசன்: ஆளுக்கு எத்தனை சீட் வேணும்னு சொல்லுங்க?
மைக்கோ: எங்களுக்கு பத்து
சாபதாஸ்: எங்களுக்கும் பத்து
டேக்பன்: அப்போ எங்களுக்கு இருவது
பன்.ராதாகிருஷ்ணன்: இவங்களுக்கு பத்து, அவங்களுக்கு பத்து, கேப்டனுக்கு இருவது, நமக்கு இருவது... ஆக மொத்தம் அறுவது, ச்சியர்ஸ்!
பழ.கணேசன்: மொத்தமே 40 தொகுதி தான். சரி, நைட்டாயிடுச்சு... நாளைக்கு பேச்சு வார்த்தைய தொடருவோம்!
இன்னொரு நாள்...

பழ.கணேசன்: ஆளுக்கு எத்தனை சீட் வேணும்னு கரெக்டா சொல்லுங்க!
மைக்கோ: எங்களுக்கு பத்து
சாபதாஸ்: எங்களுக்கும் பத்து
டேக்பன்: அப்போ எங்களுக்கு இருவது
பன்.ராதாகிருஷ்ணன்: இவங்களுக்கு பத்து, அவங்களுக்கு பத்து, கேப்டனுக்கு இருவது, நமக்கு இருவது... ஆக மொத்தம் நூத்தி இருபது, ச்சியர்ஸ்!
பழ.கணேசன்: மொத்தமே 40 தொகுதி தான். சரி, நைட்டயிடுச்சு, நாளைக்கு பேசுவோம்!
இந்த வாரத்தில் ஒரு நாள்...

பழ.கணேசன்: ஆளுக்கு எத்தனை சீட் வேணும்னு ஃபைனலா சொல்லுங்க?
சாபதாஸ்: நீங்களே சொல்லுங்க
மைக்கோ: நீங்களே சொல்லுங்க
டேக்பன்: நீங்களே சொல்லுங்க
பன்.ராதாகிருஷ்ணன்: யாராவது எதையாவது சொல்லுங்க
பழ.கணேசன்: சரி நைட்டாயிடுச்சு, நாளைக்கு பேச்சுவார்த்தைய தொடருவோம்!
இன்னொரு நாள்...

பழ.கணேசன்: சரி, உங்களுக்கும் வேணாம்... எங்களுக்கும் வேணாம். வாங்க, பானைக்குள்ள சீட்டு எழுதிப் போட்டு ஆளாளுக்கு கைய விட்டு சீட்ட எடுப்போம். வர்ற தொகுதி அவங்கவங்களுக்கு. ரைட்டா?
டேக்பன்: நான்தான் மொதல்ல கைய விடுவேன்!
சாபதாஸ்: இல்ல, நான்தான் விடுவேன்!
மைக்கோ : நோ, நான்தான்!

பன்.ராதாகிருஷ்ணன்: எதுக்கு சண்டை? வாங்க பானைய தரையில போட்டு உடைப்போம், தரையில சிதறுற சீட்ட எல்லோரும் ஒரே டைம்ல டைவடிச்சு எடுத்துக்குவோம்!
டேக்பன்: பானைய நான்தான் உடைப்பேன்
சாபதாஸ்: இல்ல, நான்தான் உடைப்பேன்
மைக்கோ: நோ, நான்தான் உடைக்கணும்