சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

யவன ராணி துளியும் தாமதிக்கவில்லை.  ‘‘யாரங்கே...’’ என்று சோழ வீரர்களை அழைத்தாள். பவ்யமாக வந்து நின்றவர்களிடம், ‘‘தந்தையின் மயக்கத்தைப் போக்க மாற்று மருந்து கொடுங்கள்...’’ என்று கட்டளையிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

‘‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக சோழ மன்னரையும், சேர மன்னரையும் தகுந்த வீரர்களுடன் புகார் கடற்கரைக்கு வரச் சொல்லுங்கள்...’’ கர்ஜித்தபடியே வாயிலை நோக்கிச் சென்றவள், அங்கிருந்த தனது வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டாள். கனமான தன் வாளை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள். காற்றை விட வேகமாக வாயிலை நோக்கிப் பாய்ந்தாள். காத்திருந்த புரவியில் தாவி ஏறினாள். கடற்கரையை நோக்கி பறந்தாள்.

பொழுது மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்ததற்கு அறிகுறியாக சூரியனின் கதிர்கள் மேகங்களை பளபளப்பாக்கிக் கொண்டிருந்தன. மணிவண்ணன் கோட்டத்தை நோக்கி பக்தர்கள் சென்று கொண்டிருந்தார்கள். துறைமுகத்தை நோக்கி வணிகர்களும், கூலியாட்களும் நடந்து கொண்டிருந்தார்கள். அநேகமாக ஏதேனும் கப்பல் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு ஏற்பவே சுங்கச் சாவடியிலிருந்து சரக்குகளை பரதவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக கூச்சல்கள் எழுந்தன.

குறி வைத்து அந்தத் திசையை நோக்கி தன் புரவியை செலுத்தினாள். குதிரையின் குளம்பொலி கேட்டு பக்தர்களும், வணிகர்களும் பாதையை விட்டு விலகினார்கள். ஆரோகணித்திருந்த யவன ராணியை வியப்புடன் பார்த்தார்கள். எதையும் பொருட்படுத்தாமல் கோட்டை வாயிலை நெருங்கிய ராணி, புரவியில் அமர்ந்தபடியே அம்பு ஒன்றை எடுத்து வானத்தை நோக்கி செலுத்தினாள். அந்த சமிக்ஞையை புரிந்து கொண்ட வாயிற் காவலர்கள், துரிதமாக கோட்டைக் கதவைத் திறந்தார்கள்.

அகழியைக் கடப்பதற்கான மரப்பாலம் இறங்க மட்டும் சற்று தாமதமானது. அதற்காக ராணி காத்திருக்கவும் இல்லை, புரவியின் வேகத்தைக் குறைக்கவும் இல்லை. குனிந்து புரவியின் காதில் எதையோ ஓதினாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் முன்னங்கால்களை உயர்த்தி, இறங்கிக் கொண்டிருந்த மரப்பாலத்தை நோக்கி பாய்ந்தது. விநாடிக்கும் குறைவான நேரத்தில் அந்தப் பாலத்தைக் கடந்து ஒரே தாவாக தரையில் இறங்கியது. நம்ப முடியாத வியப்புடன் இந்தக் காட்சியை காவலர்கள் கண்டார்கள்.

நிலத்தில் கால் பதித்த புரவியை சுங்கத்துறையை நோக்கி செலுத்தினாள். கடற்கரை மணலில் வலைகளை மடித்துக் கொண்டிருந்த பரதவர்கள் அலறியடித்து ஒதுங்கினார்கள். தரையைப் போலவே காற்றை கிழித்துக் கொண்டு மணலிலும் குதிரை பறக்கும் என்பதை இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போதுதான் கண்களுக்கு நேராக அதை பார்க்கிறார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சுங்கத் துறையை அடைந்த யவன ராணி, ஓடும் புரவியிலிருந்து அப்படியே இறங்கினாள். புயலை விட வேகமாக சுங்கத் துறைக்குள் நுழைந்தாள்.

‘‘புறப்படும் தருவாயில் எந்தக் கப்பல் இருக்கிறது?’’
‘‘பாண்டிய நாட்டுக் கப்பல், ராணி...’’ எழுந்து நின்றபடி சுங்க அதிகாரி பதிலளித்தார்.
‘‘சரக்குகள் ஏற்றப்பட்டனவா?’’
‘‘இப்போதுதான் முடித்தோம்...’’
‘‘எத்தனை பீப்பாய்கள்?’’

‘‘ஒன்று கூட இல்லை...’’
‘‘என்ன?’’
‘‘ஆம் ராணி. இந்தக் கப்பலில் பீப்பாய்கள் எதுவும் செல்லவில்லை...’’
‘‘உளறாதே. நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்...’’
‘‘இலச்சினை பொறித்ததே நான்தானே?’’

‘‘அப்படியானால் புகார் தளபதியின் மாளிகையில் இருந்து வந்த பீப்பாய்கள் எங்கே?’’
‘‘அப்படி எந்தப் பொருளும் இங்கு வரவில்லை...’’
சட்டென்று நிதானித்தாள் யவன ராணி. ‘‘வரவில்லையா?’’

‘‘ஆம் ராணி. மதியத்துக்கு மேல் சேர நாட்டுக்குச் செல்லும் கப்பலில்தான் புகார் தளபதியின் மாளிகையிலிருந்து கொண்டு வரப்பட்ட பீப்பாய்கள் செல்கின்றன...’’
‘‘அவற்றை எங்கு வைத்திருக்கிறீர்கள்?’’
‘‘இன்னமும் அவை வந்து சேரவில்லை...’’
‘‘நிஜமாகவா..?’’

‘‘வேண்டுமானால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...’’
பார்த்தாள். சுங்கத் துறைக்கு சொந்தமான இடத்தில் எந்த
பீப்பாய்களும் இல்லை.

‘‘இப்போதாவது எங்களை நம்புகிறீர்களா?’’ - பணிவுடன் கேட்டாலும் சுங்க அதிகாரியின் குரலில் கோபம் கொப்பளித்தது.
‘‘உங்களை நம்பவில்லை என்று நான் எப்போது சொன்னேன்...’’ - நிறுத்திய ராணி, தன் கண்களை கடல் பக்கம் சுழலவிட்டாள். மீன் கொடி பறக்க, புறப்படுவதற்குத் தயார் நிலையில் பாய்மரக் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது.

‘‘இது ஒன்றுதான் சுங்க இலாகாவுக்கு சொந்தமான அலுவலகமா?’’
‘‘ஆம் ராணி. புகார் துறையில் இது மட்டும்தான்...’’

யோசனையுடன் வெளியே வந்தாள். ஆடி அசைந்தபடி மாட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் மேல் பீப்பாய்கள் இருந்தன.
‘‘இதுதான் ராணி புகார் தளபதியின் மாளிகையிலிருந்து வரும் வண்டி...’’ சுங்க அதிகாரியின் குரல் அவளுக்கு பின்னால் இருந்து ஒலித்தது.
‘‘வரும் வழியில் இந்த வண்டியை நான் பார்க்கவில்லையே..?’’
‘‘நீங்கள் வாயில் பக்கமாக வந்திருப்பீர்கள்...’’
‘‘ஆம்...’’

‘‘வண்டி பின்பக்கமாக வரும்... காவிரியின் முகத்
துவாரம் வழியாக!’’
ராணி மின்னலென வண்டி வந்த திசையில் பாய்ந்து ஓடினாள். அனைத்துமே புரிவது போலிருந்தது. காவிரியின் முகத்துவாரத்தில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும். இளமாறனும், பாண்டிய இளவலும் மறைந்திருக்கும் பீப்பாய்கள் இறக்கப்பட்டு, சரக்குள்ள வேறு பீப்பாய்கள் ஏற்றப்பட்டிருக்கும். சோழ வீரர்களுக்குள் மறைந்திருக்கும் பாண்டிய உளவாளிகள் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்திருப்பார்கள்...

புரவிக்கு சமமாக ஓடியவள், காவிரியின் முகத்துவாரத்தை அடைந்தாள். அவள் கணித்தது போலவே கடல் பக்கமாக நான்கைந்து பீப்பாய்கள் மிதந்து கொண்டிருந்தன. முதலில் சென்ற பீப்பாயில் இளமாறனும், அதற்கு அடுத்ததில் வயதான பெரியவர் ஒருவரும், அதற்கும் பின்னால் ஒரு சிறுவனும் இருந்தார்கள். அநேகமாக அந்த சிறுவன்தான் பாண்டிய இளவரசர் செழியனாக இருக்க வேண்டும்.

பீப்பாய்களையே படகாக பாவித்து ஒவ்வொருவரும் மூங்கில் கழிகளையே துடுப்பாக்கி கடலை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த பீப்பாய்களை துளையிடும் நோக்கத்துடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டியவள், இளமாறன் செல்லும் பீப்பாயை குறி பார்த்து எய்தாள். அதே நேரம் யானையின் பிளிறல் ஒன்று எழுந்தது. யவன ராணியின் உதட்டிலும் புன்முறுவல் பூத்தது. முந்தைய நாள் இரவு எந்த போர் கவசம் அணிந்திருந்த யானையின் செவிகளில் சொல்ல வேண்டியதைச் சொன்னாளோ... அதே போர் யானைதான் சரியான நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தது.

யானையின் கண்களை உற்றுப் பார்த்தபடியே யவன ராணி தலையசைத்து சமிக்ஞை செய்யவும், அவள் எய்த அம்பு, இளமாறன் செல்லும் பீப்பாயை துளைக்கவும் சரியாக இருந்தது...
எந்தப் பகுதியை தன் கால்களால் தொட்டதோ, அந்தப் பகுதியின் மேற்புறமாக அப்படியே தன் நகத்தை அந்த வௌவால் கொண்டு சென்றது. தன் உடலைத் திருப்பி மகேஷ் இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தான்.

இறந்த வௌவால் ஒன்றின் வாய்க்குள்தான் அந்த ‘நேம் ஆஃப் த ரோஸ்’ நூல் அழுத்தமாக சொருகப்பட்டிருந்தது. அந்த இடத்தை அடைந்ததும் சற்று நிதானித்தது.
பின்னர் அந்தரத்தில் பறந்தபடியே தன் கால் நகத்தால், புத்தகத்தை மூன்று முறை தட்டியது. அப்படி அது தட்டும்போது தான் மகேஷ் கவனித்தான். எந்த வாய்க்குள் அந்த நூல் சொருகப்பட்டிருந்ததோ அந்த வாய்க்குள் சின்னதாக ஒரு குப்பி இருந்தது. எதற்காக அது அங்கிருக்கிறது? தெரிந்து கொள்ள வேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டான்.

மூன்று முறை தட்டி முடித்ததும் வாயும், காதுகளும் மூடப்பட்ட அந்த வௌவால் தரையில் இறங்கியது. தட்டுத் தடுமாறாமல் வந்த வழியே சென்றது. தன் கண்களை விட்டு அது மறையும் வரை காத்திருந்த மகேஷ், பின்னர் தன் வாயை நூல் சொருகப்பட்டிருந்த இடத்துக்கு கொண்டு சென்றான். அவன் கண்களுக்கு நேராக அந்தக் குப்பி தெரிந்தது. எப்படி எடுப்பது?
சட்டென்று அவனுக்கு ஒரு ஐடியா வந்தது. தனது இறக்கைகள்தானே புத்தகத்தினுள் சிக்கியிருக்கின்றன... கால் நகங்கள் சுதந்திரமாகத்தானே இருக்கின்றன...

அது போதும். உடனே தலைகீழாக கவிழ்ந்து கால்களை மேலே கொண்டு வந்தான். பக்குவமாக கால் நகத்தால் அந்தக் குப்பியை எடுத்தான். ‘என்னை குடி’ என்று அதன் மீது எழுதப்பட்டிருந்தது. சற்றும் யோசிக்காமல் குப்பிக்குள் இருந்த திரவத்தை குடித்தான். என்ன ஆச்சர்யம்... ஃபீனிக்ஸ் பறவையாக மாறியிருந்த அவன், இப்போது தன் பழைய உருவத்தை அடைந்திருந்தான். ஃபீனிக்ஸ் பறவையின் சிறகுகள் அந்த நூலில் சிக்கியிருந்தன. அது எந்த வகையிலும் அவன் பழைய உருவத்தை அடைய தடையாக இருக்கவில்லை.

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். கை, கால்களை உதறி தன்னை பரிசோதித்துக் கொண்டான். எல்லாமே கச்சிதமாக அவனது உடல் உறுப்புகளாக இருந்தன. ‘ஜாலி ஜாலி’ என ஜம்ப் செய்தான். மரப்பாலம் அதிர்ந்து ஓசையை எழுப்பியது. ‘அச்சோ... இது தப்பாச்சே...’ நிதானித்து சுற்றிலும் பார்த்தான். நல்லவேளையாக சத்தம் கேட்டு யாரும் அங்கு வரவில்லை.
‘இப்ப இந்த புத்தகத்தை படிக்கணும். அப்பத்தான் மாயஜால வித்தைகளை கத்துக்க முடியும். ஆனா, எப்படி இதை எடுக்கறது? ஒருவேளை இந்த புக்கை தொட்ட மத்த வௌவால்கள் மாதிரியே நாமளும் செத்துப் போயிட்டா..?

ஆள்காட்டி விரலால் கன்னங்களை தட்டியபடி யோசித்தான். பைண்டிங் செய்யப்பட்ட பக்கமாக புத்தகத்தை தடவியபடியே தொட்டுப் பார்த்தான்.
அடுத்த நிமிடம், ‘‘சொல்லுங்க எஜமான்...’’ என்றபடி விக்கிரமாதித்தனுக்கு சொந்தமான வேதாளம் அவன் முன்னால் தோன்றியது. முதுகை வளைத்து அவனை வணங்கவும் செய்தது...
‘‘ஸ்காட் வில்லியம்ஸ் வந்துக்கிட்டு இருக்கான்...’’ தனது செல்போனில் ஒளிர்ந்த செய்தியை படித்தபடியே ரங்கராஜன் சொன்னான்.
‘‘எங்க?’’ - ராமின் குரலில் பதற்றம் தெரிந்தது.

‘‘இங்க. மாடிப் படிக்கட்டுல ஏறிட்டு இருக்கான்...’’ ‘‘லிப்ட்?’’‘‘அதுல அவன் ஆட்கள் காவலுக்கு நிக்கறாங்க...’’ ‘‘ஏதோ சந்தேகம் அவனுக்கு வந்திருக்கு. அதனாலதான் இங்க வந்திருக்கான்...’’ என்ற பெரியவர், ‘‘நாங்க வெளில போக வேற வழி இருக்கா?’’ என்று ராமைப் பார்த்து கேட்டார்.‘‘இருக்கு...’’ என்றபடி அந்த அறையின் மறுமுனையில் இருந்த கதவைத் திறந்தான். ‘‘சுருள் வட்டப் பாதைல இரும்புப் படிக்கட்டு இருக்கு. அது வழியா இறங்கிடுங்க...’’
‘‘இந்த வழி..?’’

‘‘ஸ்காட் வில்லியம்ஸுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...’’ சொன்னதுடன் அவர்கள் இருந்த அறையின் டியூப் லைட்டை அணைத்தார். எங்கும் இருள் சூழ்ந்தது. ஓரளவு கண்களுக்கு இருள் பழகியதும் ராம் திறந்த கதவுப் பக்கமாக பெரியவர் வந்தார். கூடவே தேன்மொழியும், ரங்கராஜனும். மூவரும் இரும்புப் படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

அதே நேரம் ராமின் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. நீண்ட மூச்சுடன் தன்னை சமன்படுத்திக் கொண்ட ராம், கதவை மூடி சத்தம் வராமல் தாழிட்டார். பின் இருட்டிலேயே துழாவினார். மேஜை தட்டுப்பட்டது. அதைத் திறந்தார். உள்ளுக்குள் தயார் நிலையில் ஒரு கண்ணாடிக் கோப்பை இருந்தது. அதனுள் இருந்த ஸ்காட்ச்சை லேசாகப் பருகினார். கைகளை தன் வாய்க்கு அருகில் கொண்டு சென்று ஊதினார். நெடி அடித்தது. திருப்தியுடன் ஹாலுக்கு வந்தார்.

மீண்டும் காலிங் பெல் ஒலித்தது.
டியூப் லைட்டை போட்டவர் ‘‘யாரது..?’’ என்று குரல் கொடுத்தபடியே நடையை தள்ளாட்டமாக மாற்றினார். வாசல் கதவைத் திறந்தார்.
அதற்காகவே காத்திருந்தது போல் ஸ்காட் வில்லியம்ஸ் வேகமாக உள்ளே நுழைந்தான்.

‘‘சார்... இந்த நேரத்துல நீங்க எங்க இங்க?’’ ராமின் குரலில் அதிர்ச்சியும், வியப்பும் தெரிந்தது.
‘‘டீ சாப்பிட்டு போகலாம்னு வந்தேன்...’’
‘‘சார்...’’

‘‘ஷட்டப். தேன்மொழி எங்க..?’’ அடிக்குரலில் கர்ஜித்தான். ‘‘எந்த தேன்மொழி..?’’ ‘‘தெரியாத மாதிரி நடிக்காதீங்க ராம். ஒரு பையனோட உங்க வீட்டுக்கு அவ வந்தது எனக்குத் தெரியும். எப்படீன்னு கேட்காதீங்க. எங்க அவ..?’’ கேட்டதும் நிற்காமல், ஹாலை தாண்டியிருந்த அறைப்பக்கம் சென்றான். விளக்கை போட்டான். படுக்கையில் ராமின் மனைவி தன் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.

விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தவன், அடுத்த அறை பக்கம் சென்றான். அது கிச்சன். அதை ஒட்டியிருந்த இன்னொரு அறையின் விளக்கை போட்டான். பூஜையறை.
‘‘நீங்க என்ன சொல்றீங்கனே எனக்கு தெரியலை சார். தேன்மொழி இங்க எதுக்கு வரணும்...’’ கேட்டபடியே அவனை பின்தொடர்ந்தார் ராம். அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் கோடியில் இருந்த அறைக்குள் ஸ்காட் வில்லியம்ஸ் நுழைந்தான். விளக்கை போட்டான்.

சற்று முன்பு வரை தேன்மொழியும், ரங்கராஜனும், பெரியவரும் எந்த அறையில் இருந்தார்களோ அந்த அறைதான் அது. அதற்குள் சென்றான். பின்னாலேயே ராமும் நுழைந்தார். அவரது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஸ்காட் வில்லியம்ஸ் தன் பார்வையால் அறையை அலசினான். ஒரு காகிதம் தரையில் விழுந்து கிடந்தது. குனிந்து எடுத்தான். படித்தான்.
அவன் முகம் இறுகியது.

‘‘இது இங்க எப்படி வந்தது?’’ கேட்டபடியே ராமின் பனியனை கொத்தாகப் பிடித்தவன் அவரை அப்படியே சுவற்றோடு சாய்த்தான்.
தன் முன்னால் நீட்டப்பட்ட காகிதத்தை கண்களில் பூச்சி பறக்க ராம் பார்த்தார்.

ரெட் ரத்தப் பரிசோதனை நிலையத்திலிருந்து ரங்கராஜனும், தேன்மொழியும் எடுத்து வந்த குறிப்புகள் அவை. விஷக்காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் ரிசல்ட் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன...

‘‘நம்ம தலைவர் பிரசாரத்துல எதிர்க்கட்சித் தலைவரோட குடும்பத்தையை கடுமையா விமர்சனம் பண்றாரே... ஏன்?’’
‘‘தனி நபர் விமர்சனம் செய்யக்கூடாதுன்னுதான்!’’

‘‘தேர்தல் பிரசாரம்
ரொம்ப நேரம்
செய்யணும்...’’
‘‘அப்படின்னா
மெகா சீரியல் ஆர்ட்டிஸ்டுகளாலதான் முடியும் தலைவரே!’’

‘‘அந்தத் தெருவுல எதிர்க்கட்சிக்காரங்க முகாம் போட்டு இருக்காங்கன்னு நம்ம தலைவர் எப்படிச் சொல்றாரு..?’’
‘‘சிக்கன் பிரியாணி வாசனை மூக்கைத் துளைக்கிறதை வச்சித்தான்!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

(தொடரும்)