வலைப்பேச்சு facebook



நடு ராத்தியில டூவீலர்ல வீட்டுக்கு போகும்போது, வழியில மடக்கும் போலீஸை நினச்சாக்கூட பயமில்லை (பேப்பரும் பர்ஸும் இருக்கு), ஆனால் பக்கத்திலயே ஓடி வர்ற நாயை நினைச்சாலே... (பாருங்க, இப்பக்கூட கால்
நடுங்குது!)
- உமாநாத் செல்வன்

உடைந்த கண்ணாடியாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியும் தெளிவாக முகம்
காட்டத்தான் செய்கிறது...
- சீதா லட்சுமி

கடந்த காலத்தின் நினைவுகளைக் கொல்லும் வயது எட்டவில்லை இன்னும் எனக்கு...
- லஷ்மி சரவணகுமார்

பாக். ராணுவத்தினர் அம்மாவைக் கண்டு நடுங்குவர்: நாஞ்சில் சம்பத்
# அம்மா நடுங்க பெங்களூரு
ஜட்ஜ் போதும்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

இனிமேல் திருமணம் செய்பவர்களுக்கு பூரிக்கட்டை, கரண்டி, பாத்திரம் அடி எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை... சமைக்கத் தெரிஞ்சாதானே இதெல்லாம் கைல எடுக்க முடியும்?!
- குமரன் கரு

என்னிக்கு டிரைவிங் லைசென்ஸ், வோட்டர் ஐடியில் எங்க படத்தை எங்களை மாதிரியே
போடுறீங்களோ,
அதுக்குப் பிறகுதான் இந்த நாடு வல்லரசாகும்!
# சாபம்
- ஈரோடு கதிர்

நாம் ஒரே எடைதான்... நம்மை நிறுப்பவர்களின் தராசைப் பொறுத்து கூடவோ, குறையவோ செய்கிறோம்!
- மோகனசுந்தரம் மீனாட்சிசுந்தரம்

என்னை
அதிகம் பதம் பார்ப்பது
அன்பெனும்
வன்முறையே...
- யாழி கிரிதரன்

வயதை மறந்த
தோள் தேற்றுதல் போதும்
மனிதம் தழைக்க.
- ஜோ ஃபெலிக்ஸ்

எல்லாவற்றையும்
உதிர்த்த பிறகும்
கம்பீரமாய்த்தான்
நிற்கிறது
மொட்டை மரம்!
- நறுமுகை தேவி

கறுப்பும் ஒரு நிறம்தான்... அதைப் ‘பூசி’ மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.
- பாத்திமா பாபு

இடது கையால எழுதுறவங்களையும் வலது கையில வாட்ச் கட்டுறவங்களையும் வித்தியாசமாத்தான் பார்க்குது இந்த
சமூகம்.
- ஸ்ரீதேவி
செல்வராஜன்

இரண்டு நாள் முன்னாடி, ‘முந்துகிறார்... முந்துகிறார்... நமது வேட்பாளர் முந்துகிறார்’ அப்பிடீன்னு ஒரு பதிவைப் பார்த்தேன். எனக்கு ஒரே குழப்பமா போச்சு. தேர்தல் அடுத்த மாசம், இப்பவே என்ன முந்துகிறார்..? பிரியாணி பொட்டலத்துக்கா... இல்ல, துட்டுக்கா... வேற வழியில்லாம கேட்டா, ‘பிரசாரத்தில் முந்துகிறார்’னு சொல்லுறாங்க. நான் ஏதாவது சொல்லிருவன்!
- வாசு முருகவேல்

twitter

@bassiva 
  கலைஞர் கொடுத்த டிவி குட்டி போடுமா: ராமராஜன்
# உங்க மிக்ஸி, கிரைண்டர், ஃபேன்லாம் குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா??

@DilojiniS
வீசி எறிந்த பொம்மையின் அருமை அதை அடுத்த குழந்தை எடுத்து விளையாடும்போதுதான் புரிகிறது. சில நேரம் மனித மனங்களும் அப்படித்தான் :(

@udanpirappe  
இன்று ஜெ பிரசாரம் இல்லை
# ஆகவே இன்று குத்தாட்டப் பாடல்கள் கிடையாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

@manipmp 
கோடைக் காலத்தில்
மழையையும் காணோம்,
ரமணன் சாரையும் காணோம்!

@manipmp 
கோடைக் காலத்தில்
மழையையும் காணோம்,
ரமணன் சாரையும் காணோம்!

@RazKoLu   
யார் தயவும் இல்லாம உழைத்து முன்னுக்கு வந்தவங்கள சொல்லுன்னா அஜித்ன்றான், ஆர்யான்றான்...
ராப்பகலா கஷ்டப்பட்ட தன்
தகப்பனை மறந்து விட்டு!

@Elanthenral  
ஐம்பது பைசாவால் திருட்டைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் பிச்சைப் பாத்திரங்களில் நாணயங்கள் விழுகின்றன.

@powderdappa 
ஆதார் அட்டையும், அத்தை பொண்ணும் ஒண்ணு; ரொம்ப நாள் வெயிட் பண்ண வெச்சு, வேண்டாம்னு சொல்லிருவாங்க...

@krpthiru 
சில பெண்கள் புருவம் உயர்த்தி, அகல கண்கள் விரித்து, ‘குட் மார்னிங்’ சொல்லும்போது நமக்கு முன் முந்திக்கொண்டு நம் முகம் மலர்ந்து விடுகிறது!

@saysatheesh 
அ.தி.மு.க.வின் அனைத்து வேட்பாளர்களும் ஏப்ரல் முதல் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். சிம்பாலிக்கா என்னவோ சொல்ல வர்றாங்க...

@WritterMazhalai 
நீ கற்பனையில் பார்க்கின்ற மாதிரி எல்லாம் தெரிவதற்கு நான் ஒன்றும் கண்ணாடி இல்லை...

@kiramaththan   
தொலைந்தவை எல்லாம் நம்மைத் தொலைத்தவை!

@senthilcp 
SABOTAGE = யாருக்கும் சளைக்காதவன்.
# சபாஷ் துபாஷ். கோடம்பாக்கம் அர்னால்டு பட டிஸ்ட்ரிபியூட்டர் ராக்ஸ்