facebook வலைப்பேச்சு



யாருமற்ற இரவுநேர கிராமத்து சாலை, எல்லோரையும் பாடகனாக்கி விடுகிறது!
 மன்னை முத்துக்குமார்

பெயின்ட் டப்பாவை பாத்ரூம் வாளியா பயன்படுத்தினா அது நடுத்தரக் குடும்பம்; மாடில செடி வைக்கும் தொட்டியாகப் பயன்படுத்தினா அது உயர்தர குடும்பம்!
 அம்புஜா சிமி

நல்லவேளை, சிவாஜி உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருக்கே நடிப்பு சொல்லிக் கொடுப்பார்கள் போலும் ‘முகநூல்’ க்ரொஸோவாக்கள்!
 ஆத்மார்த்தி ஆர்எஸ்

நீ கண்ணாமூச்சி விளையாட்டு
சொல்லித் தராததால்நான்
தூங்கத் தெரியாமலே போனேன்!
 கலாப்ரியா

முதல் திறனாய்வுத் தேர்வு விடுமுறை இன்று தொடங்கியது. நாம் அதை ‘காப்பரீட்சை’ என்றழைத்திருந்தோம்.
 ஹரன் பிரசன்னா

தீர்ந்துவிடாத ஒரு பொருளை மௌனத்தினுள் சேமித்து வைக்கிறேன்...
 சுந்தரி விஸ்வநாதன்

நாடு பிரியணுமா வேணாமான்னே ரெஃபரண்டம் மூலம் முடிவு பண்ணிக்கிறாங்க.
இதே கான்சப்ட்டை புருஷன் பொண்டாட்டி விஷயத்திலும் கொண்டாந்துடலாம்.
பாவம், கோர்ட் கேஸுன்னு இழுத்தடிக்கறாங்க!
 அராத்து

உணர்வில் அழகு
முத்தமிடுகையில்
புன்னகை...
 நளினி அருள்

உன்னை உன்னிடம்
கேட்பேன்
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்டு
மண்டியிடுவேன்
மன்றாடுவேன்
பச்சைத் தண்ணீரும் பருகாது
மருகிக் கரைவேன்
பிரியமே
உன்னை உன்னிடம் மட்டுமே கேட்பேன்
கடவுளிடம் கூட அல்ல.
 பிரான்சிஸ் கிருபா

ஐஸ் பக்கெட் அமெரிக்கா சூழலுக்கு சரி.
நம்மூர்ல தீச்சட்டிதானே சரியா வரும் மக்களே!
# தீச்சட்டிக்கு யாரேனும் தயாரா?
 தேசாந்திரி வழிப்போக்கி

எதுவும் இல்லை
என விரிகிறது
ஆகாயம்
இருக்கிறது எனச் சொல்லி
சடசடக்கிறது
அங்கிருந்தோர் பறவை
 ராஜ் பிரின்ஸ்

உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அன்புக்குப் பஞ்சமில்லை,
தலையணைக்கு தான் பஞ்சம்!
 சுந்தர சிபி

‘அண்ணா’ என்று அழைக்கும் இளம்பெண்களைக் கூட மன்னித்துவிட முடிகிறது.
‘அங்கிள்’ என்று அழைக்கும் இளம்பெண்களை மன்னிக்கவே முடிவதில்லை.
 ஜி சுரேந்தரநாத்

twitter


@CarbonKaradi   
டிக்ஷனரி என்றொரு புத்தகம் வாசித்தேன்... மேஜர் சுந்தர்ராஜன் போல் தமிழும் ஆங்கிலமுமாக பேசுகிறது; என்ன கதையென்றே புரியல!

@mrithulaM
சொங்கி ஆண் புல்லட் ஓட்டுறதும் பல்கி பெண் ஸ்கூட்டி ஓட்டுவதும் ரியல் லைஃப் காமெடிகள்!

@raajeswaran
வாயைக் கட்டி வயித்தக் கட்டி சேர்த்து வச்சிக்கிட்டு ‘அக்கடா’ன்னு உக்காரும்போது ‘‘உங்களுக்கு சுகர் இருக்கு’’ன்னு சொல்வான் பாரு...
# திரும்ப வாயைக் கட்டு, வயித்தக் கட்டு!

@thoatta   
கடன் கேட்கிறப்பவும், கடன் சொல்றப்பவும் நம்ம குரலே கொஞ்சம் தழுதழுக்குமே, அதை மனசாட்சியின் குரல்னும் சொல்லலாம்!

@naatupurathan
 ‘‘உங்களுக்கு வயலின் வாசிக்கத் தெரியுமாமே, வாசிச்சுக் காட்டுங்களேன்’’னு கேட்ட நண்பர்கிட்ட, ‘‘தமிழ்லயா ஹிந்தியிலயா’’ன்னு கேட்டேன். காறித் துப்பாத கொறையா மொறைக்கறாப்ல!

@senthilcp   
‘‘சமையலை முடிச்சுட்டேன்...’’ ‘‘ம்... ம்... உனக்கென்ன, ஈஸியா முடிச்சுட்டே. இனி நான் கஷ்டப்பட்டு நீ சமைச்சதை முடிக்கணும்!’’

@Pa_Siva 
புலியை துரத்துறேன்னு உசுப்பேத்தி விட்டானுங்க பாரு... சண்டைய விலக்குறவன மட்டும் நம்பவே கூடாதுடா சாமீ!

@Mr_Kumaran2014 
நீ சுமக்கின்ற நம்பிக்கை, நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

@writercsk   
‘மங்கள்யான்’ சிக்கன முயற்சி என்பதில் அதன் எஞ்சினியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளமும்தானே அடக்கம்!

@writernaayon
கிரகத்தால் மகிழ்ச்சி, துன்பம், செலவு, ஆர்வம் வருமென ஜோதிடர்கள் சொல்வார்கள்; விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்!

@Sangakavi
இதுநாள்வரைக்கும் நம்மளத்தான் செவ்வாய் புடிச்சுது... இப்ப நம்ம ஆளுங்க பிடிச்சிட்டாங்க செவ்வாயை!

@ThePayon 
ன் தெருவில் சில விஷமிகள் உள்ளனர். நான் அவர்களைக் கடக்கும்
போதெல்லாம் ‘‘இதுவும் கடந்து போகும்’’ என்று சொல்லிவிட்டு சிரிக்கின்றனர்.

@chinnapulla
கல்யாணத்துக்கு வந்து கைகுலுக்கும் நட்பைவிட, திருட்டுக் கல்யாணத்துக்கு காதலியைக் கடத்தும்போது கைகோர்க்கும் நட்பே சிறந்தது!

@Tottodaing
 சுவைக்காகவோ, பசிக்காகவோ அருந்தப்படு வதில்லை... தேநீர் ஒரு போதை!