ஓவர் வாலுத்தனம்!



மங்கள்யான் க்ளைமாக்ஸ் பயணத்தை ஆக்ஷன் த்ரில்லர் படம் போல விவரித்த விதம் பயங்கர பக்... பக்... திக்... திக். புதிய சாதனை படைத்த இந்தியாவின் மங்கள்யான் முயற்சிக்கு பெஸ்ட் கவரேஜ்!
 ஜி.டி.சங்கரநாராயணகுமார், தேனி.

விவாகரத்தை நாடும் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் யார் கையில் என்ற விவரங்களை அள்ளித் தந்த கட்டுரை சூப்பர்!
 கன்யாரி, நாகர்கோவில்.

‘திருட்டு டி.வி.டி பழசு... நெட் பிரின்ட் புதுசு!’ காலத்துக்கேற்ற கட்டுரை. தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, உலகெங்கும் இதே ‘தலைவலி’தான்.
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவின் கால்ஷீட்டை பயன்படுத்தாமல், இப்போது ‘டைம் கெடைக்கும்போதுதான் கால்ஷீட்’ எனச் சொல்ல வைத்திருக்கும் பட யூனிட்டின் ‘வாலு’த்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?
 எல்.மாரிமுத்து, மதுரை.

வாழத் தெரிந்தவர்களுக்கு திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை அவசியமே இல்லை. இல்லறத்துக்கே இலக்கணம் படைத்த நாம், இன்று நீதித்துறையும், மருத்துவத் துறையும் கலங்கிப் போக வைக்கலாமா?
 ஏ.லோகநாதன், சென்னை16.

சினிமாக்காரர்கள் சொந்த செலவில் விழா நடத்தி மாறி, மாறி புகழ்வதா பாராட்டு? ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய, ‘ஐ’ பட மேக்கப்மேன் ஷான் ஃபுட், ஷங்கரையும் விக்ரமையும் மனம்விட்டுப் பாராட்டியதுதான் உண்மையான பாராட்டு!
 மனோகர், மேட்டுப்பாளையம்.

யாருக்கு வரும் இந்த மனசு? ‘‘நான் நடிக்காம இருந்திருக்கேன். அதான் ‘மெட்ராஸ்’ படம் இயல்பா வந்திருக்கு’’ என்று சொன்ன கார்த்திக்கு ஹேட்ஸ் ஆஃப்!
 மயிலை.கோபி, சென்னை.

‘மெயின் ஹூம் ரஜினிகாந்த்’ என்ற பெயரே போதுமே, அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆக! அதில் ஆபாசமாய் போஸ்டரும் விளம்பரமும் ஏன் செய்கிறார் அந்த டைரக்டர்? அவருக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன் பாஸ்!
 வி.கே.ராஜேந்திரன், காங்கேயம்.

‘நீ சரியான எம்டனப்பா’ எனச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். சென்னையில் குண்டுமழை பொழிந்த அந்த எம்டன் கப்பலின் வரலாற்றைப் படித்து திகில் அடைந்தோம். அசத்தல் கட்டுரைக்கு நன்றி!
 பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

‘‘தமிழகத்தின் கலை என்றாலே சினிமா தான். ஓவியங்கள், சிற்பங்களை யார் ரசிக்கிறார்கள்’’ என்ற பி.ஏ.கிருஷ்ணனின் ஆதங்கம், தமிழன் யோசித்தே ஆக வேண்டிய நிதர்சனம்!
 அ.யாழினி பர்வதம், சென்னை.