நியூஸ் வே



*ஷூட்டிங், பட புரொமோஷன் வேலை என எங்கும் தனது அப்பாவுடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ராதாவின் மகள் துளசி.

*நண்பர்களுக்கு உதவப் போய், ஏழு படங்களில் சிறு ரோல்களிலும், ஆறு படங்களில் முழு நீள ஹீரோவாகவும் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. அவரது படங்கள் தாமதமாவதற்கு இதையும் ஒரு காரணமாக தயாரிப்பாளர்கள் சொல்வதால், இனி கெஸ்ட் ரோலில் நடிப்பதை தவிர்க்கப் போகிறார்.

*எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகப்படுத்திய அருந்ததி, இப்போது ‘தொட் டால் தொடரும்’ படத்தில் நடிக்கிறார். தனது பழைய வீடு ராசியாக இல்லாததால், வேறு வீடு மாறியிருக்கிறார்.

*ரஜினி தனக்கு நெருங்கிய நிறைய பேருக்கு படம் செய்து கொடுத்துவிட்டார். ஆரம்ப காலத்தில் உதவியவர்களுக்கும் வேண்டியதைச் செய்துவிட்டார். அந்தப் பட்டியலில் ஒரே ஒருவர் மட்டும் பாக்கி. அவர், பஞ்சு அருணாசலம். ஆக்ஷன் இமேஜ் மாறி, குடும்பப் படங்கள் செய்து இவரால்தான் பெண்களுக்குப் பிடித்தமானவராக ஆனார் ரஜினி. ‘அருணாசலம்’ செய்யும்போது அந்த உதவிப்பட்டியலில் சேர மறுத்து விட்டார் பஞ்சு. அனேகமாக ரஜினியின் அடுத்த படத்தின் பெரும் பங்குதாரராக அவர் இருப்பார்.

*என்ன செய்யலாம் என தீவிரமான ஆலோசனையில் இருக்கிறார் வடிவேலு. அவரது நண்பர்களையும், சில டைரக்டர்களையும் அழைத்து தினம் தினம் பேசி வருகிறார். விளைவாக, சில படங்களின் அறிவிப்பு வரலாம்.

*பவர் ஸ்டார் ரொம்ப நாட்களுக்குப் பிறகு ‘ஐ’ பட ஆடியோ விழாவில்தான் காணப்பட்டார். அவர் மீது செக் ரிட்டர்ன் வழக்குகள் எக்கச்சக்கமாக இருப்பதால், வெளிநடமாட்டம் இல்லை. அவர் கைவசம் படங்களும் இல்லை.

*‘ஆதிபகவனை’ ரொம்பவே எதிர்பார்த்த நீதுசந்திராவுக்கு, இப்போது ‘திலகர்’ என்ற ஒரு படம் மட்டுமே தமிழில்! ‘‘அடுத்து இந்திப்படம் ஒன்றில் நடிக்கிறேன். தொடர்ந்து தமிழ்ப்படங்கள்ல நடிக்க விரும்புறேன். தமிழ்ல என்னோட சம்பளத்தைக் கூட கம்மி பண்ண ரெடி’’ என கண்கள் சிமிட்டிச் சொல்கிறார் நீது.

*சமீபத்தில் திண்டுக்கல் போன நமீதா, திரும்பும் வழியில் திராட்சை தோட்டம் ஒன்றைப் பார்த்திருக்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்லி, தோட்டத்திற்குள் சென்று கொடியில் தொங்கும் திராட்சைகளை ரசித்தவர், ஃப்ரெஷ்ஷாக கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.

*ஓவியா ஷூட்டிங்கிற்கு கேரளாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். இதனால் தமிழில் பல படங்கள் கை நழுவிப் போவதாக உணர்ந்து, இப்போது சென்னையில் வீடு பார்த்துக் குடியேறியிருக்கிறார். உடல்நலமில்லாத அம்மாவின் தேவைக்காக வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்கிறார். அதிரடியான கிளாமரிலும் ஒரு கலக்கு கலக்க முடிவெடுத்திருக்கிறார்.

*‘ஐ’ படத்தின் ஒரு பாடல் காட்சி வெகுநாட்களாக ஷூட் செய்யப்படாமல் இருந்தது. இப்போதுதான் எமி கால்ஷீட் கிடைத்து பரபரப்பாக படமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக தீபாவளிக்கு ‘ஐ’ கன்ஃபர்ம்.

*பாவனாவுக்கு பேய்க்கதைகள் என்றால் கொள்ளை ஆசை. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கேரளா போய், தனது தோழிகளுடன் படகு வீடு சென்று, அங்கே விடிய விடிய பேய்க்கதைகள் கேட்டு, ரசித்து, மிரண்டு வருவது பாவனாவின் ஹைலைட் ஹாபி!

*தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மீனாட்சி, படங்கள் சரிவர அமையாததால் குத்தாட்டத்துக்கு மாறி விட்டார். எழிலின் ‘வெள்ளைக்கார துரை’யில் விக்ரம்பிரபுவுடன் செம டான்ஸ் போட்டவரின் சேவை, தனுஷின் ‘சூதாடி’யிலும் உண்டாம்!

*‘தீயாய் வேலைசெய்யணும் குமாரு’ படத்துக்காக ஜப்பானில் நடந்த பாடல் காட்சியில் சின்னதாய் காஸ்ட்யூம் கொடுத்தபோதும் சரி, ‘அரண்மனை’யில் ரிஸ்க்கான டேக்குகள் போனபோதும் சரி... ஹன்சிகா கொடுத்த ஒத்துழைப்பில் நெகிழ்ந்து மகிழ்ந்த சுந்தர்.சி, இப்போது விஷாலை வைத்து இயக்கி வரும் ‘ஆம்பள’யிலும் ஹன்சிகாவை கமிட் பண்ணி விட்டார்.

*சென்னையில் இருக்கிற நடிகர் சந்திரபாபு வின் கல்லறையை சுத்தப்படுத்தப் போகிறார்கள். அவரது பிறந்த நாளைக் கொண்டாடவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார்கள் வட சென்னை சினிமா ரசிகர்கள்.

*மும்பையில்தான் தங்குகிறார் மாதவன். அவரது சென்னை வீடு பூட்டித்தான் கிடக்கிறது. சில நடிகர்கள் அதை வாடகைக்கு கேட்டும் விட மறுத்து விட்டார் மாதவ். எப்போதாவது சென்னை வந்தால் அங்கு தங்குகிறார்.

*‘சதுரங்க வேட்டை’ ஹிட்டை தொடர்ந்து, அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் ஐடியாவில் இருக்கிறார் மனோபாலா. நடிக்கக் கேட்டு வரும் சான்ஸை எல்லாம் மறுக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாலா, கிடைக்கும் இடைவெளிகளில் தயாரிப்பிற்கு கதைகள் கேட்டு வருகிறார்.

*‘மாண்டலின்’ என்ற இசைக்கருவி பலருக்கும் ஸ்ரீனிவாஸால்தான் அறிமுகம். 45 வயதில் அகால மரணமடைந்த ஸ்ரீனிவாஸ், முறைப்படி இசை கற்பதற்கு முன்பாகவே மாண்டலினில் விளையாடிய மழலை மேதை. நமது சாஸ்திரிய இசையை உலக அரங்குக்குக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர்.

ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த ‘ஈட் பிரே லவ்’ படத்தில் இவரது ஆல்பத்திலிருந்து இசைப் பதிவுகளை எடுத்துப் பயன்படுத்தினர். மேற்கத்திய இசைக் கலைஞர்கள் பலரும் ஸ்ரீனிவாஸின் ஞானம் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்கள். சொந்த வாழ்க்கை சோகங்களால் இவரது பயணம் திடீர் முடிவுக்கு வந்தது பேரிழப்பு!

*அழகிப் போட்டியில் ஆரம்ப ரவுண்டுகளுக்குப் போகாமலே ‘மிஸ் குஜராத்’ பட்டம் வென்றவர் மோனல் கஜ்ஜார். ‘‘எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் பல மைல் தூரம். என்னை நடிக்க அனுமதிச்சதே பெரிய விஷயம். கிளாமரா கண்டிப்பா நடிக்க மாடேன்’’ என்கிறார்.