சன்னி லியோன்களின் சாம்ராஜ்ஜியம்!



‘வெற்றி மேல் வெற்றி குவிக்கும் கவர்ச்சி ராணி சன்னி லியோன் வாழ்க’ - இதை இந்தியில் எப்படிச் சொல்வது எனக் கேட்டு நாம் அமிதாப்புக்கு போன் அடிக்க வேண்டும்  போல! சன்னியின் லேட்டஸ்ட் படம் ‘ஏக் பெஹலி லீலா’ அந்தளவுக்கு ஹிட்! ஏற்கனவே யூ டியூபில் சுமார் ஒன்றரைக் கோடி தடவை பார்க்கப்பட்ட சாதனை இந்தப் படத்தின்  டிரெய்லருக்கு உண்டு. ‘சன்னி உடம்பைக் காட்டுறதுக்காகவே எடுத்த படம்’, ‘ஆபாசக்குப்பை’ என்றெல்லாம் மீடியா திட்டினாலும் மூன்றே நாளில் 15 கோடி ரூபாய் கல்லா  கட்டிவிட்டது படம்.

சீக்கிரமே சன்னி லியோன் நடித்த ‘குச் குச் லோச்சா ஹே’ படமும் வரவிருக்கிறது. கிட்டத்தட்ட நம்மூர் `பாமா விஜயம்’ கதை. காமெடி ட்ரீட் என்பதால் இதுவும் நிச்சய வெற்றி  என்கிறார்கள். ‘‘ஒரு காலத்தில் மல்லுவுட் இப்படித்தான். பெரும் ஹீரோக்களுக்கு இல்லாத ‘ஓபனிங்’, ஷகிலாவுக்கு இருக்கும். அப்படியொரு நிலைமை பாலிவுட்டுக்கும் வரலாம்!’’  என ஆருடம் சொல்கிறார்கள் சினிமா வல்லுநர்கள். அந்த பயத்தில் அமீர் முதல் ரன்பீர் வரை ஆடிப் போய் கிடக்கிறார்கள்.

இந்தி சினிமாவில் இப்படியொரு ஸ்கோப் இருக்கிறதென்றால் விடுவார்களா? சன்னி லியோன் போலவே அமெரிக்க ஆபாசப்பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியப்  பெண்கள் பலரும் பாலிவுட் மதிலில் ஏறிவிட்டார்கள். எப்போதும் எந்தப் பூனையும் குதிக்கலாம்... இதுதான் இன்றைய நிலை. இதோ அந்தப் பூனைகளின் லிஸ்ட்!


பிரியா அஞ்சலி ராய்

டெல்லியில் பிறந்த பெண்தான். 2 வயதிலேயே அமெரிக்கத் தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு மின்னசோட்டா மின்னலாக வளர்ந்தார். மார்க்கெட்டிங் கிராஜுவேட் படிப்புக்குப்  பிறகு ஆர்வம் காரணமாகவே ஃபேஷன், கவர்ச்சி, ஆபாசப்படம் என இறங்கினார். சன்னியை விட நல்ல உடற்கட்டு, கவர்ச்சி என அமெரிக்க இந்தியர்களால்  அங்கீகரிக்கப்பட்டவர். அங்கேயே சில ஹாலிவுட் படங்களில் தலை காட்டினார். இப்போது இங்கே சன்னி லியோனுக்கு இருக்கும் மதிப்பைப் பார்த்துவிட்டு, இவரும் சில  பாலிவுட் இயக்குநர்களிடம் பேசியிருக்கிறார். இந்தி ப்ராஜெக்ட் ஒன்று கைவசம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஷாந்தி டைனமேட்

பெயரைப் போலவே கவர்ச்சி வெடிகுண்டு. உகாண்டாவில் இந்திய - கிரேக்க தம்பதிக்குப் பிறந்த இவர், குடும்பச் சூழலால் லண்டனுக்கு வந்து பற்றாக்குறை பட்ஜெட்டோடு  வளர்க்கப்பட்டார். படிப்பும் அதிகமில்லை. வருமானத்துக்காக நிர்வாண போஸ் கொடுக்கப் போய், இங்கிலாந்தின் டாப்பான டாப்லெஸ் மாடலாகிவிட்டார். பாலிவுட்  ஹீரோயினாவது இவருக்கு பால்யக் கனவாம். காலம் இவ்வளவு கனிந்திருக்கும்போது விடுவாரா? பேச வேண்டியவர்களிடம் பேசி, ‘ஐ லவ் துபாய்’ எனும் இந்திப் படத்தில்  கமிட்டாகிவிட்டது இந்த கவர்ச்சி பாம்!

லியா ஜாய்

உண்மைப் பெயர் லியா ஜோஷி. லண்டனில் வளர்ந்த மேல்தட்டு பொண்ணு. எதிலும் டோன்ட் கேர் பேபி. ‘என்னம்மா இப்படிப் பண்றியேம்மா’ என போர்னோகிராஃபி  நடிகைகளையே அதிரடித்தது இவரது தைரியம். போர்னோ காட்சியில் எந்த வகை என்றாலும் பொண்ணு ரெடி! இந்தியப் பூர்வீகம் கொண்ட பெண்களுக்கு ஆபாசப்பட உலகில்  இருந்த தடை, தயக்கத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி வளர்ந்து வருபவர். பிறந்தது 1986தான். சன்னி அளவுக்கு ‘சாதித்த’ பின் இந்தியாவுக்கு டிக்கெட் போடலாம் என  சைலன்ட் காக்கிறது இந்த சின்ன சன்னி!

சஹாரா நைட்

“ஆபாசப்படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள் இல்லை. அது வெறும் நடிப்புதான். செக்ஸ் என்பது வேறு. கல்யாணம், காதல் என்பது வேறு!’’ எனப் பேட்டி  கொடுத்து லண்டனையே லபோ திபோவென்று ஆக்கியவர். அப்பா அம்மாவுக்கு குஜராத். அதிலும் இஸ்லாமியர்கள். இந்தப் பின்னணி எல்லாவற்றையும் விட்டு தன் துறையில்  கொடி கட்டிப் பறக்கிறார் இவர். வருங்காலத்தில் ஆபாசப் படங்களை இயக்கும் ஐடியா இருப்பதாக இவரே சொல்லிவிட்டார். ‘அதுக்கப்புறம் பாலிவுட்’ என மற்றவர்கள்  சொல்கிறார்கள்!

டெஸ்டினி டெவில்

ஷபினா என்றும் அழைக்கலாம். இந்த மான்செஸ்டர் மயிலுக்கு 32-28-34 எனும் கனவு ஸ்ட்ரக்சர். சின்ன வயதிலேயே ‘மை சாய்ஸ்’ என ஃப்ரீ செக்ஸ் கலாசாரத்துக்கு வந்தவர்.  ஸோ, இவரின் போர்னோ படங்களில் நடிப்பு மீறிய ஒரு ரியாலிட்டி, கியாரன்டி. கூடவே, செக்ஸில் யதார்த்தம் காட்டும் ‘நியூ சென்ஸேஷன்ஸ்’ நிறுவனத்தோடு பணியாற்றியதில்  டெஸ்டினிக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ். அந்தப் பேரை வைத்து அதிபர் தேர்தலிலேயே நின்றிருக்கலாம். ஆனால், டிரக்ஸ் உள்ளிட்ட சில நடவடிக்கைகளால், 2005ம் ஆண்டோடு  இவர் ஆபாசப் படங்களுக்கே முழுக்கு போட நேர்ந்தது. ‘சினிமா போனா சீரியல்’ மாதிரி, இப்போது ‘போர்னோ போனால் பாலிவுட்’ ஆச்சே! ஆக, ரீ என்ட்ரியாக இவரையும்  எதிர்பார்க்கிறார்கள்!

நீலா ஸ்கை

இந்தியாவிலேயே பிறந்தவர் என்பதால், மற்றவர்களை விட இவருக்கு இந்திய நிறம் அதிகம். அதனாலேயே வெள்ளைத் தோல் ஏரியாக்களில் பிடித்துப் போகிறது.  போர்னோகிராஃபி வீடியோக்களில் இவருக்கு இந்தியப் பெண் என்றே கேரக்டர் தருவார்கள். தோல்தான் இந்தியாவே தவிர தைரியத்திலும் ஆர்வத்திலும் இவருக்கு அமெரிக்க  மனம். இந்தியத் தொடர்பு அதிகம் இருப்பதால் சீக்கிரமே இவரும் பாலிவுட் பக்கம் திரும்பி தங்களைப் பட்டினி போட்டு விடுவாரோ என போர்னோ ரசிகர்கள் புலம்பித்  திரிகிறார்கள்!

- ரெமோ