தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் ஒருத்தருக்கு எண்ணெய் வழியும் முகம்னாலும் அவசரத்துக்கு அவர்கிட்ட இருந்தெல்லாம் சமைக்க ஆயில் வாங்க முடியாது!
- மேக்கப் போட்டு அழகை மறைப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஒரு கவர்ச்சி நடிகை இலக்கணப் பிழையோட ஆங்கிலம் பேசினாலும் அதை ‘கிராமர் மிஸ்டேக்’னுதான் சொல்வாங்க... ‘கிளாமர் மிஸ்டேக்’னு சொல்ல மாட்டாங்க!
- நடிகை பேரை தூக்கத்தில் உளறி சகதர்மினியிடம் தர்ம அடி வாங்குவோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.



‘‘என் மருமகள் ஓட்டல்ல பண்றா மாதிரியே பண்ணுவா...’’
‘‘அவ்வளவு நல்லா சமையல் பண்ணுவாளா?’’
‘‘இல்லை. அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் மீல்ஸ் பண்ணிப்பா. எனக்கு சாதா மீல்ஸ் பண்ணுவா...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘நகைக்கடைகளை திறந்து வைக்கிற மாதிரி அடிக்கடி கனவு வருதுய்யா...’’
‘‘நல்லா யோசிச்சு சொல்லுங்க தலைவரே! திறந்து வைக்கிற மாதிரியா, ‘திறக்கிற’ மாதிரியா..?’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘இந்த மருந்தை கண்ணுல ஊத்துனா நாலு மணி நேரம் கண்ணு மங்கலா தெரியும்...’’
‘‘அப்ப நர்ஸ் டூட்டி முடிஞ்சு போனதும் ஊத்துங்க
டாக்டர்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

''எந்த தைரியத்துல இப்படியெல்லாம் நீ என்கிட்ட பேசுறே?’’
‘‘நம்ம கட்சியோட ஒரே உறுப்பினர்ங்குற தைரியத்துலதான் தலைவரே!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘ஸ்கேன்ல என்ன தெரியுது டாக்டர்?’’
‘‘ஸ்கேன் எடுக்கறப்ப கூட நீங்க நர்சோட இடுப்பைக் கிள்ளுறது தெளிவா தெரியுது!’’
- அம்பை தேவா, சென்னை-116.