ஜோக்ஸ்



‘‘அட்ரஸ் புரூஃபை ஏன் எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு அலையறே..?’’
‘‘என்னை அட்ரஸ் இல்லாம ஆக்கிடுவேன்னு தலைவர் மிரட்டியிருக்கார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவர் நிறைய டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பாரா..?’’
‘‘ஏன் கேட்கறே..?’’
‘‘தன்னோட வழக்கை அஞ்சு ஜட்ஜ் உட்கார்ந்து விசாரிச்சு மார்க் போடணும்ங்கிறாரே!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

தத்துவம் மச்சி தத்துவம்

சின்ன ஊர்ல வாழலாம்... பெரிய ஊர்லயும் வாழலாம்... எவ்வளவு பெரிய ஏமாத்துப் பேர்வழியா இருந்தாலும் டுபாக்கூர்ல வாழ முடியுமா?
- பொய் சொல்லியே பொழப்பை ஓட்டுவோர்
சங்கம்
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘உங்க டாக்டர் கூகுள் மேப்ல என்ன தேடுறாரு..?’’
‘‘ஆபரேஷன்ல இருந்து தப்பிச்சுப் போன பேஷன்ட்டெல்லாம் எங்க தலைமறைவா இருக்காங்கன்னு பார்க்கிறார்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘என்னங்க இது... நாற்பது அடியில சுவையான குடிநீர்னு விளம்பரம் பண்ணியிருந்தீங்க. இப்போ ஐந்நூறு அடி போர் போட்டும் தண்ணீர் வரலை?’’
‘‘நாற்பது அடி தூரத்தில இருக்கிற கடையில மினரல் வாட்டர் கிடைக்குமே!’’
- எஸ்.எலிஸபெத் ராணி, பழைய விளாங்குடி.

‘‘ஒருவகையில கல்யாணம் கூட தேர்தல் மாதிரிதான்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘அதுக்கும் நிறைய பொய் சொல்லுவாங்களே...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

தத்துவம் மச்சி தத்துவம்

‘‘என்னதான் தஞ்சை ஓவியத்தை சென்னையில் வரைந்தாலும் அதை தஞ்சை ஓவியம்னுதான் சொல்வோமே தவிர சென்னை ஓவியம்னு எல்லாம்  சொல்ல முடியாது!
- பெயின்டிங் பண்ண வானவில்லிடம் வண்ணத்தை கடன் கேட்போர் சங்கம்
- என்.கஜேந்திரன், நிரவி.