வலைப்பேச்சு



கொசு கடிக்குதேன்னு கொசுவர்த்தி ஏத்தி வச்சேன்... இதுக்கு ‘பீட்டா’காரங்க கொசுவை துன்புறுத்துறதா வழக்கு போட்டாலும் போடுவாங்கன்னு  நெனைக்கிறேன்!
- சுகு பெரம்பலூர்

@thalabathe 
நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விப்பட்டா ‘இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்’னு உடனே சொல்ற மாதிரி ஒரு நண்பனையாச்சும்  சம்பாதிக்கணும்!

@meenammakayal 
கணவனின் எல்.ஐ.சி பாண்ட்ல நாமினியாக தன் பெயரைப் பார்த்து எந்த மனைவியும் பெருமைப்படுவதில்லை; பயப்
படவே செய்கிறாள்.

உனது திருட்டில் எனக்கான பங்கை முதலில் தந்துவிடு என்பதே ஓட்டுக்குப் பணம் கேட்பது...
- அம்புஜா சிமி

@ilayakaanchi 
ஐந்தெழுத்து மந்திரம் கேட்டாள்... அவள் பெயரை உச்சரித்தேன். நல்லவேளை, ஆறெழுத்து மந்திரம் கேட்கவில்லை... முன்னாள் காதலியின் பெயர்  அது!

அதிமுக சாதனைப் பட்டியலை வாசிக்க 36 நாட்கள் தேவைப்படும் - ஜெ.
வாய்தா வாங்கியது, பெங்களூருவில் இருந்தது, தொண்டர்கள் மொட்டை அடிச்சிக்கிட்டது, அலகு குத்தியது, மண் சோறு சாப்பிட்டது, தீச்சட்டி  ஏந்தியது, செம்பரம்பாக்கம் ஏரியை லேட்டா திறந்து விட்டது... கடைசியா ஸ்டிக்கர் ஒட்டியது வரை சொல்லணும்னா 100 நாள் கூட ஆகும்.
- இளையராஜா அனந்தராமன்

தமிழ்நாட்டில் நடந்த குடியரசு தின விழாவில், பல்வேறு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. ஆனால், அரசுக்கு அதிக  வருவாய் ஏற்படுத்திக் கொடுத்த டாஸ்மாக் கடை ஊர்தி மட்டும் ஊர்வலத்தில் வரவே இல்லை. ஓட்டுனர் சரக்கடிச்சிட்டு வண்டியை எங்கேயாவது  கொண்டு போய் கவுத்துட்டாரா..?
- இளையராஜா அனந்தராமன்

இந்த வருஷம் இவ்வளவு கச்சா எண்ணெய் விக்கணும்னு இலக்கு வைச்சா, அது அரபு நாடு; இவ்வளவு வாகனங்கள் விக்கணும்னு இலக்கு வைச்சா,  அது ஜப்பான்; இவ்வளவு செல்போன் விக்கணும்னு இலக்கு வைச்சா, அது சீனா. இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கணும்னு இலக்கு வைச்சா,  அது தமிழ்நாடு.
- அம்புஜா சிமி

@Chandhraka 
பத்மவிபூஷண் விருது கொடுத்ததை விட புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவி செய்திருந்தால் அதிகம் மகிழ்ந்திருப்பேன் - டாக்டர் சாந்தா
# விருதுக்குத் தகுதியானவர்!

பொங்கல்ல போட்ட நூறு கிராம் முந்திரிப்பருப்புல ஒண்ணு கூட நம்ம தட்டுல விழாது. ஆனா பிரியாணியில போட்ட ரெண்டே ரெண்டு கிராம்பும்  நம்ம தட்டுல மிஸ்ஸாகாம விழும்போதுதான் வாழ்க்கைன்னா என்னனு லேசா புரிய ஆரம்பிக்குது!
- தேவி செல்வராஜன்

‘‘உனக்கு ஏதாவது தெரியுமா... கொஞ்சம் சும்மா இரேன்...’’ என்பவர்களிடம் நமக்கும் ஏதோ கொஞ்சமாவது தெரியும் எனப் புரிய வைப்பது அத்தனை  எளிதாய் இருப்பதில்லை...
- சண்முக வடிவு

@chevazhagan1 
நம்முடைய சோம்பேறித்தனத்தால் கடிகாரத்தை 5 நிமிடமோ 10 நிமிடமோ
சுறுசுறுப்பாக்குகிறோம்!

கோயில்ல ‘செல்ஃபி வித் மூலவர்’, ‘செல்ஃபி வித் அம்மன்/தாயார்’ ஜஸ்ட் ஃபார் ரூ.500 போன்ற அறிவிப்புகள் வெகு விரைவில் வந்துடுமோன்னு  எனக்கு இப்பல்லாம் படபடப்பா இருக்கு!
- முருகானந்தம் பாலகிருஷ்ணன்

@kurumbuvivek 
அதிகமா மக்களுக்கு கன்ஃபியூஸ் ஆகற விஷயங்கள்... லெஃப்ட் - ரைட்புல் - புஷ்
சுதந்திர தினம் - குடியரசு தினம்

@sheik_twitts 
‘‘அப்பா, காதல்னா என்னப்பா?’’ எனக் கேட்ட மகனிடம் கூறினேன்... ‘‘உங்கம்மா என்னை எவ்வளவு அடிச்சாலும் நான் வீட்டை விட்டு போகாம  இருக்கேன் பாரு, அதுதான் காதல்!’’

@meenammakayal 
ஊரில் சிலரைப் பார்த்திருப்போம், பழகியிருக்க மாட்டோம். அப்படியானவர்களை வெளியூரில் பார்த்தால் புன்னகைத்து விசாரிக்கத் தோன்றுமே,  அதுதான் ஊர்ப் பாசம்.

ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம்,
23 வகையான கேள்விகளுக்கு பதில் கேட்கப்படுகிறது.
# என்னா கேள்வியா இருக்கும்?
1. முதுகு எவ்வளவு தூரம் வளையும்?
2. ஒரு மணி நேரத்தில எத்தனை ஸ்டிக்கர் ஒட்ட முடியும்?
3. ‘‘புரட்சித்தலைவி, இதயதெய்வம், கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர், தங்கத்தாரகை, வருங்கால பாரதப் பிரதமர் அம்மா’’ - இதை  இடைவிடாம எத்தனை தடவை சொல்ல முடியும்?
4. காருக்கு பின்னாடி ஓடத் தெரியுமா?
5. வேன்ல தொங்கத் தெரியுமா?
6. ஹெலிகாப்டருக்கு பின்னாடியே பறக்கத் தெரியுமா?
7. மீடியாகாரங்களைக் கண்டா ஓடத் தெரியுமா?
8. 110-ன்னா என்னன்னு தெரியுமா?
9. 1100-ன்னா என்னன்னு தெரியுமா?
10. 11000-ன்னா என்னன்னு தெரியுமா? (புதுசா கொண்டு வருவோம்யா...)
11. காவடி எடுக்கத் தெரியுமா?
12. தீ மிதிக்கத் தெரியுமா?
13. மண் சோறு சாப்பிடத் தெரியுமா?
14. அலகு குத்திட்டு அழாம இருக்கத் தெரியுமா?
15. கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யத் தெரியுமா?
16. அடுத்தவங்க பேனரை ‘டர்ர்ர்’னு கிழிக்கத் தெரியுமா?
17. மினிஸ்டர் பதவி போச்சுன்னாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கத் தெரியுமா?
18. ஜெயிலுக்கு முன்னாடி நாள் கணக்கா உட்கார்ந்திட்டு இருக்க முடியுமா?
19. டி.வி. விவாதத்துக்கு போயிட்டு வாயை மூடிட்டு இருக்க முடியுமா?
20. தரையில விழுந்து உருளத் தெரியுமா?
21. தாடி வளர்க்கத் தெரியுமா?
22. பதவியேற்கும்போது கதறிக் கதறி அழத் தெரியுமா?
23. நொடிக்கொரு தடவை ‘அம்மாவுக்கு நன்றி’ எனச் சொல்லத் தெரியுமா?

@SmmSelva 
வாழ்க்கைய ஒரு செவ்வகம், முக்கோணம், சதுரம்னு சொல்லாம ஏன் வட்டம்னு சொல்றாங்க தெரியுமா? நம்மள சுத்தல்ல விடுறதாலதான்!

‘விதி விளையாடியது’ எனச் சொல்லும் எவரும், விதி என்ன விளையாட்டு விளையாடியது என சொன்னதே இல்லை!
 நானே ஜிந்திச்சேன்!
- எழிலன் எம்

‘ப்ரேமம்’ ஃபேன்ஸ் தொல்ல தாங்க முடில. ரஜினிக்கே பத்மவிபூஷண்னா, மலர் டீச்சருக்கு கண்டிப்பா ‘பாரத ரத்னா’ கிடைக்கும்னு கெளப்பி  விடுறாய்ங்க...
- பூபதி முருகேஷ்

@chevazhagan1
செரிமானம் செய்யும் எச்சிலை அவமானம் செய்யப் பயன்படுத்தியதுதான் மனிதன் செய்த மாபெரும் சாதனை!

கரண்டியின் இயக்க விசையில் கொழம்புசட்டியில் மீன்கள் நீந்துகின்றன... அடடே!!
- சத்திய குமார்

@Dhrogi 
குழந்தைகள் சொல்லும் கதைகளில் கெட்டவர்களே இருக்க மாட்டார்கள். இருந்தால், அவர்கள் பலூனை உடைப்பவர்களாக, மிட்டாய்  கொடுக்காதவர்களாகத்தான் வருவார்கள்!

@dear_kanmani 
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்; முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.

@Itz_rajez 
பேருந்தின் கடைசி சீட்டைப் போலவே வாழ்க்கை... திடீர் திடீர்னு தூக்கி
யடிச்சுருது!

@sridharsta 
கூட்டுக் குடும்பத்தை பிரித்து தனிக் குடும்பமாக மாற்றி, பூட்டிய வீட்டில் குழந்தையை அனாதையாக மாற்றி, வேலைக்குச் செல்லும் நிலைக்குப் பெயர்  நாகரிகம்!

@Arul28667667 
கேப்டன் 234 தொகுதியில் எங்கு வேணாலும் நிற்பார்: பிரேமலதா
அவரு எங்க வேணாலும் நிக்கட்டும். ஆனா ஸ்டெடியா நிக்கச் சொல்லுங்க!

குடியரசு - இந்தியா
குடி அரசு - தமிழ்நாடு
- உலகானந்தா

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பை டி.வி, வானொலியில் எச்சரிக்கை செய்தோம்: ஓ.பன்னீர்செல்வம்
மின்சாரம் இல்லாமல் இயங்கும் டி.வி, வானொலி வாங்காதது
மக்கள் தப்புதான்...

@urs_priya 
நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம் தெரிந்துகொள்ள ஒரு எளிய வழி... அவர்களிடம் ஒரு உதவி கேட்பது!

‘‘இளம் குற்றவாளிகளின் வயது வரம்பு பதினாறுன்னு கொறச்சாங்களே... ஆணின் திருமண வயது இருபத்தி ஒண்ணுல இருந்து ஏதாச்சும் டிஸ்கவுன்டு  பண்ணிருக்காங்களா?’’ன்னு ஒருத்தன் கேக்கான்!
- ரிட்டயர்டு ரவுடி