ஜோக்ஸ்



‘‘என் மனைவியும் வேலைக்காரியும் செல்போனும் சிம் கார்டும் மாதிரி...’’
‘‘அவ்வளவு ஒற்றுமையா?’’
‘‘இல்லை! ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஊர் வம்பைப் பேசுவாங்க...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘நாட்டில் படிச்சவங்க எண்ணிக்கை அதிகரிப்பது பத்தி தலைவர் ஏன் கவலைப்படறார்?’’
‘‘ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுறாங்களேன்னுதான்!’’
- அதிரை புகாரி,
அதிராம் பட்டினம்.

‘‘போஸ்டரைப் பார்த்து எதுக்குய்யா தலைவர் கத்துறாரு...’’
‘‘தலைவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புன்னு போடுறதுக்கு பதிலா ‘செருப்பு’னு பிரின்ட் ஆகிடுச்சாம்!’’
- எஸ்.எலிஸபெத் ராணி, மதுரை.

தெருவுல ‘பெரிய கோலம்’ போடலாம். ‘சிறிய கோலம்’ போடலாம். ‘அவசரக் கோலம்’ போட முடியுமா?
- கோலம் போட்டுக் கொண்டே கோலாகலமாக சிந்திப்பவர்கள்
சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

என்னதான் நம்மைப் பற்றி ஒருவர் தப்புக்கணக்கு போட்டாலும், அதை கணக்கு வாத்தியாரை வைத்தெல்லாம் திருத்த முடியாது!
- பிரபல நீதிபதியிடம் பிராப்ள கணக்கு கற்றுக்கொள்வோர் சங்கம்
- என்.கஜேந்திரன், நிரவி.

என்னது... கட்சியில தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், கஷ்டங்கள், சந்தித்த வேதனைகள்னு எல்லாத்தையும் தலைவர் மேடையில சொல்றார்..?’’
‘‘இது வேதனை விளக்கப் பொதுக்கூட்டமாம்...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

கபாலியை ஒரு வாரமா ஆளைக் காணோமே..?’’
‘‘திருட்டுல புதிய யுக்திகளைக் கத்துக்க அமெரிக்காவுக்கு டிரெயினிங் போயிருக்கான்..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.