உயிர்த் தகவலியல் படிப்புக்கு உலகெங்கும் வேலைவாய்ப்பு



உயிரியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கு கணிப்பொறி தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் அத்தகவல்களின் அடிப்படையிலான மேலாண்மை குறித்து படித்தறியும் அறிவியல் பிரிவே ‘உயிர்த் தகவலியல்’ (Bioinformatics ). இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், ஆய்வியல் அறிஞர்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘நவீன அறிவியல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. உயிரினங்களின் மரபணு தொடர்பான தகவல்களைச் சேமித்தால் அதன்மூலம் அவ்வுயிரிக்கு ஏற்படும் நோய்களை எளிதில் கண்டறியலாம். தாவரங்களில் நெல், கோதுமை உள்ளிட்ட சில தானியங்களின் மரபணுக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு,

மரபுக்குறியீடுகளின் வரிசை முழுமையாக அறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நோய் உண்டாக்கும் ஜீன்கள் யாவை? தானிய மணியின் அளவு, சுவை, வடிவம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான ஜீன்கள் யாவை? உள்ளிட்ட நிறைய வினாக்களுக்கு விடை கிடைத்துள்ளது. இத்தகவல்களின் அடிப்படையில் ஓர் உயிரினத்தின் பண்பை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். அவற்றை எளிதில் மாற்றி அமைக்கலாம்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவர மற்றும் விலங்கினங்களின் மரபணு அமைப்பை மாற்றியமைத்து, அவற்றை பொருளாதாரப் பயனை வாரி வழங்கும் ஆதாரமாக மாற்ற முடியும். மனிதனின் மரபணு அமைப்பு மற்றும் மரபுக் குறியீட்டின் வரிசையை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம் நமக்கு நம் வாழ்நாளில் ஏற்படப் போகும் நோய்களைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் மிக எளிதில் கண்டுணரலாம். அந்த வகையில் உயிர்த் தகவலியல் படிப்புக்கு எதிர்காலத்தில் பெரும் தேவையுள்ளது. அறிவியல் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் இப்படிப்பை தாராளமாக தேர்வு செய்யலாம். 

உயிர்த் தகவலியல் துறை சார்ந்த படிப்புகள் / பிரிவுகள்

* Structural Bio informatics அமைப்பு உயிர்த் தகவலியல்
* Drug Designing மருந்து வடிவாக்கம்
* Phylogenetics பைலோ ஜெனிடிக்ஸ்
* Computational biology கணிப்பொறி உயிரியல்
* Population genetics குழு மரபியல்
* Genotype  analysis

மரபணு அமைப்பு பகுப்பாய்வு

* Splicing prediction ஸ்ப்லைசிங் ப்ரெடிக்ஷன்
* Natural Selection - இயற்கை தேர்வு
* Computational Chemistry - கணிப்பொறி வேதியியல்
* Computational Physics
 
கணிப்பொறி இயற்பியல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம் B.Sc., M.Sc., M.Phil., Ph.D.,  D.Phil., D.Sc., B.S., M.S., B.Tech., M.Tech.,  Diploma in Bio informatics.
 
இந்தியாவில் சிறந்த உயிர்த் தகவலியல் துறைகளைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...

* புனே பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா
* இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், உத்தரப்பிரதேசம்
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
* பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி
* டிபார்ட்மென்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி
* இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு பயோ டெக்னாலஜி, பெங்களூரு
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை
* சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை
* அசாம் பல்கலைக்கழகம், அசாம்

உலக அளவில் சிறந்த உயிர்த் தகவலியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...

* யுனிவர்சிடி ஆஃப் லீட்ஸ், இங்கிலாந்து (www.leeds.ac.uk)
* சூச்சோ யுனிவர்சிடி, சீனா (www.suda.edu.cn)
* யுனிவர்சிடி ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
* ஹார்வர்டு யுனிவர்சிடி, அமெரிக்கா (www.harvard.edu)
* யார்க் யுனிவர்சிடி, கனடா (www.yorku.ca)
* யுனிவர்சிடி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா, அமெரிக்கா (www.ucf.edu)
* ஸ்டாக்ஹோம் யுனிவர்சிடி, ஸ்வீடன் (www.su.se)
* யுனிவர்சிடி ஆஃப் வாட்டர்லூ, கனடா (www.uwaterloo.ca)
* சைனீஸ் அகாடெமி ஆஃப் சயின்சஸ், சீனா (http://english.cas.cn)
* யுனிவர்சிடி ஆஃப் வெஸ்டர்ன் ஒன்டாரியோ, கனடா (www.uwo.ca)

உயிர்த் தகவலியல் துறையில் சாதித்த இந்திய வல்லுநர்கள் சிலர்...

* பேராசிரியர் எஸ்.பார்த்தசாரதி
* பேராசிரியர் இந்திரா கோஸ்
* பேராசிரியர் வினய் சர்மா
* பேராசிரியர் சத்யவாணி குட்டுலா
* பேராசிரியர் கே.வேலுராஜ்
* பேராசிரியர் தியோபக்கார் தீப்தி
* பேராசிரியர் சவ்ரவ் சஹா
* பேராசிரியர் ராகவா
* பேராசிரியர் அமித் சர்மா
* பேராசிரியர் மஞ்சு பன்சுல்

உலக அளவில் சிறந்த உயிர்த் தகவலியல் துறை அறிஞர்கள் சிலர்...

* பேராசிரியர் டான் க்னத்
* பேராசிரியர் ஆண்டர்ஸ் க்ரோக்
* பேராசிரியர் குயோன்
* பேராசிரியர் டேவிட் வெஸ்ட்ஹெட்
* பேராசிரியர் ஃப்ரெட் வ்ரைட்
* பேராசிரியர் டெரென்ஸ் ஹ்வா
* பேராசிரியர் ஜிர்க்கே
* பேராசிரியர் டொனால்டு க்னத்
* பேராசிரியர் மிங்க் சென்
* பேராசிரியர் மார்செல் ரெய்ன்டெர்ஸ்

உயிர்த் தகவலியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் செயல்படும் குழுக்கள்/ அமைப்புகள்...

*இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி, பிரேசில்
* பயோடெக் அசோசியேஷன், அமெரிக்கா
* பயோ இன்ஃபர்மேடிக்ஸ் நெட்வொர்க், நெதர்லாந்து
* ஆப்ரிக்கன் சொசைட்டி ஃபார் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், ஆப்ரிக்கா
* ஏசியா பசிபிக் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் நெட்வொர்க், தாய்லாந்து
* அமெரிக்கன் கிரிஸ்டல்லோக்ராபிக் அசோசியேஷன், அமெரிக்கா
* சொசைட்டி ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், அமெரிக்கா
* பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் சொசைட்டி, அமெரிக்கா
* சௌத் ஆப்ரிக்கன் சொசைட்டி ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், தென் ஆப்ரிக்கா
* மெடிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன், அமெரிக்கா

உயிர்த் தகவலியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ விருதுகள் / பதக்கங்கள்...

* ப்ராங்க்ளின் அவார்டு, நியூசிலாந்து
* டூரிங் அவார்டு, அமெரிக்கா
* ப்ரைம் மினிஸ்டர் ப்ரைஸ், ஆஸ்திரேலியா
* தி லெம்பெங் மெடல், ஆஸ்திரேலியா
* பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் ப்ரைஸ், ஆஸ்திரேலியா
* சாமுவேல் எஸ்.வில்க்ஸ் அவார்டு, அமெரிக்கா
* டிக்பி மெமோரியல் மெடல், ஹாங்காங்
* யு.எஸ். நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ்
* சென்டென்னியல் அவார்டு, ஹார்வர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா
* யங் சயின்டிஸ்ட் அவார்டு, டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, புதுடெல்லி

உயிர்த் தகவலியல் துறை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுள் சில...

* இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், அலகாபாத்
* இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச், புதுடெல்லி
* டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, புதுடெல்லி
* டிபார்ட்மெண்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு.
* மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி
* ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், புதுடெல்லி
* மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்
* கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி
* உயிர்த் தகவலியல் துறைகளைக் கொண்ட கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்.

அடுத்த இதழில் பயிர்ப் பெருக்கவியல் (Plant breeding)

-வெ.நீலகண்டன்