காட்டின் கூரை!



அமேசான் போன்ற அடர் காடுகளில் மரங்கள் வெகு உயரத்துக்கு வளர்ந்திருக்கும். அந்த மரங்களின் உச்சியில் சிறு சிறு உயிரினங்கள் ஏராளமாக வாழ்கின்றன. இந்த ஏரியாவை ‘கனோபி’ (காட்டின் கூரை) என்பார்கள்.

மரத்தின் உச்சியில் உருவாகி, அங்கேயே வாழ்ந்து, இந்த பூமியில் தரை என ஒன்று இருக்கிறது என்பதை அறியாமலேயே மடிந்துவிடும் இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவு. இந்த ஆராய்ச்சிக்காக பிரான்ஸ், கம்பி வடத்தில் செல்லும் எளிய வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் பயணித்து ஆராய்கிறார் இந்த விஞ்ஞானி.