கேபிள் கார் பயணம்!



நகர்ப்புற நெரிசலைத் தீர்க்க புதுமை வழி கண்டிருக்கிறது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரம். காம்ப்ளெக்ஸோ டோ அலெமோ என்ற நெரிசலான குடியிருப்புப் பகுதியில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கேபிள் கார் போக்குவரத்து நடக்கிறது. இடையில் நான்கு ஸ்டேஷன்கள். டிராபிக் நெரிசல் இல்லாமல் பறந்து பயணிக்கிறார்கள்.