எக்ஸ்பிரஸ் விபத்து!



‘வேகம்’தான் இன்றைய வாழ்வின் அடையாளமாக இருக்கிறது. நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்களுக்காக ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’க்கள் நிறைய போடப்படுகின்றன. உச்சபட்ச வேகத்தில் வாகனத்தை இந்த சாலைகளில் செலுத்தலாம்.

ஆனால் விளைவு? தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், பனி பொழியும் காலை நேரத்தில் முன்னே சென்ற வாகனம் கண்ணுக்குத் தெரியாததால் ஒருவர் மோத, தொடர்ச்சியாக 100 வாகனங்கள் ஒன்றின்மீது இன்னொன்று மோதிக் கொண்டன. இவ்வளவு வாகனங்கள் இணைந்து செய்த மிகப்பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது.