மரியாதை வந்தது!




‘டிப்ஸ்’ பிறந்த கதையைப் படித்து வியந்தேன். சாதாரணமாக நாம் கடந்து செல்லும் விஷயங்களுக்குத்தான் சுவாரஸ்யமான பல பின்னணிகள் இருக்கின்றன. அதை வெளிக் கொண்டு வரும் முத்தாரத்திற்கு நன்றி.
 தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

கொட்டும் குளவியின் சுரீர் வரலாற்றைப் படித்துப் பிரமித்தேன். யப்பா..! குளவியைச் சுற்றி இவ்வளவு விஷயங்களா? உண்மையில் பூச்சிப் பூக்கள் அபாரம். 
 பி.கே.சுகந்தா, திருச்சி.

நம் உடலைப் பற்றிய தகவல் துணுக்கு களைப் படித்து வியந்தேன். படைப்பின் உச்சகட்டம் மனிதன். இயற்கையின் உன்னதமான படைப்பு மனித உடல். துணுக்கு களைப் படித்து முடித்தபின் என் உடல் மீது எனக்கு தனி மரியாதை வந்தது.
 சகுமைந்தன், சென்னை.

‘சம்பவம் ஐந்து’ தகவல்கள் அனைத்தும் தேனாக இனித்தன. வரலாறுகள்தான் மனிதனுக்கு மிகச் சிறந்த ஆசான். அதை நினைவூட்டும் ‘முத்தாரம்’ பேராசான் என்பது உண்மை.
 அ.பா.ராசன், திருமங்கலம்.

எங்களது கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கச் செய்து, அதற்கு தக்க பதிலையும் அளித்து வரும் ‘ஐன்ஸ்டீன் மாமா’வுக்கு தேங்க்ஸ்!
 எஸ்.தேவிகா, தருமபுரி.