குப்பை மலை!



மனிதர்கள் எவ்வளவு குப்பை கொட்டுகிறார்கள்?
 ஏ.மணி, 9ம் வகுப்பு,
சாய்ராம் பள்ளி, சென்னை.

ரொம்பவே அதிகமாகத்தான் மனிதர்களாகிய நாம் குப்பை கொட்டுகிறோம். இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு குடும்பமும் தினம் ஒன்றேமுக்கால் கிலோ குப்பை கொட்டுகிறது. இதை ஓராண்டு கணக்கில் பார்த்தால் அரை டன் அளவைத் தாண்டி விடும்.

இந்தியா போன்ற மறு உபயோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாடுகளில் சராசரியாக அரை கிலோ குப்பை போடுகிறார்கள்.மனிதர்கள் கொட்டுகிற குப்பையை எல்லாம் மலை போல குவித்துக்கொண்டே சென்றால், அது தினமும் 20 லட்சம் டன் அளவு உயர்ந்துகொண்டே இருக்கும். அந்த உயரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்!

கடலிலும் சூறாவளி ஏற்படுமா?
 ம.மணிமேகலை, 8ம் வகுப்பு, சிஎம்சி பள்ளி, தென்காசி.

நிச்சயமாக... ‘வாட்டர்ஸ்பவுட்ஸ்’ என்று அழைக்கப்படும் கடற்சூறாவளி, டன் கணக்கில் கடல்நீரை உறிஞ்சியெடுத்து, சுழற்றி அடிக்கும். ஒரு மைல் அளவு கூட பிரமாண்டமாக எழுந்து சுழலும்.பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள் இதை ‘கடல் அரக்கன்’ என எண்ணி பயந்தார்கள்.சுனாமியின்போது இப்படிப்பட்ட அரக்க அலைகள் உருவாயின.

உலகிலேயே மிக அதிக பனி உள்ள இடம் எது?
 ஆர்.ராஜசேகர், 10ம் வகுப்பு, கேவிஎஸ் பள்ளி, விருதுநகர்.அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் உள்ள மவுன்ட் ரெய்னர்... இதுதான் உலகிலேயே அதிக பனிப்பொழிவு உள்ள இடம். இங்கு ஓராண்டில் 100 அடி (30.48 மீட்டர்) அளவு பனி பொழிகிறது. இந்தப் பனியைக் கொண்டு 17 மனிதர்களின் உயரம் கொண்ட மிகப்பெரிய பனிமனிதனை உருவாக்கி விடலாம்!