நம்பினால் நம்புங்கள்



*தென் அமெரிக்க வனங்களில் வாழும் ‘புடு’ என்ற ரகம்தான், மான்களில் மிகச்சிறியது. மூங்கில் புதர்களுக்கு நடுவில் வசிக்கும் இவற்றின் அதிகபட்ச எடை 12 கிலோதான்.

*இணையதளங்களில் உள்ள விதிமுறைகளை உண்மையிலேயே படித்து ‘அக்ரி’ பட்டனை அழுத்த வேண்டும் எனில், ஒரு நபருக்கு ஓராண்டுக்கு 76 வேலை நாட்கள் தேவைப்படும்!

*ஜப்பானில் 200க்கும் அதிக கிட்காட் சாக்லெட் வகைகள் உள்ளன. வெள்ளரி, இஞ்சி, சோயா சாஸ், கிரீன் டீ, லெமன், வினிகர் ஆகிய சுவைகளும் இதில் உண்டு!

*பழைய அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் 95 சதவீத ஆற்றலை சேமிக்க முடியும்.

*லியனார்டோ டாவின்சியின் கற்பனையில் உதித்த கண்டுபிடிப்புகள் அவரது வாழ்நாளில் கண்டு பிடிக்கப்படவும் இல்லை... அவரது எழுத்துகள் அவர் மறைவதற்குள் பிரசுரிக்கப்படவும் இல்லை.

*இஸ்ரேல் தேசிய விமானத்தில் (எல் அல்) ஒருமுறை 1,088 பயணிகள் சென்றிருக்கின்றனர். இது ஓர் உலக சாதனை.

*புதிய இமெயில் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, மீண்டும் பழைய வேலைக்குத் திரும்புவதற்கு 64 வினாடிகள் ஆகின்றனவாம்!

*ஐ.நா. சபை ஆவணங்கள், ஹாரிபாட்டர் நாவல்கள் போன்ற பலவற்றின் மனித மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ தளம் செயல்படுகிறது.

*ஒட்டகச்சிவிங்கியின் உடலில் உள்ள பெரிய புள்ளிகளும் மனிதர்களின் விரல் ரேகை போலத் தான். ஒன்று போல இன்னொன்று இல்லவே இல்லை!

*ஜப்பானில் பெரும்பாலான தெருக்களுக்குப் பெயர்கள் கிடையாது.