நம்பினால் நம்புங்கள்



* உலகில் இதுவரை நடந்த யுத்தங்களில் 7 சதவீதம், மதம் சார்ந்த காரணங்களால்தான் ஏற்பட்டிருக்கின்றன.

* பதவியில் இருக்கும்போது சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்ட முதல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா.

* சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் சட்டபூர்வமான செலவுகளுக்காக ஆண்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறார்.

* ‘வாழ்க்கையின் எந்த விஷயத்திலும் தாங்கள் கச்சிதமாகவோ, பூரணமாகவோ, துல்லியமாகவோ (பெர்ஃபெக்‌ஷன்) நடந்துகொண்டதில்லை’ என உலகில் 10 சதவீதத்தினர் தெரிவிக்கின்றனர்.

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 14 சதவீத நிலமானது வாகனங்களை நிறுத்தவே தேவைப்படுகிறது.



* சீனாவின் ஹான் பேரரசுக்கு ரோமானியப் பேரரசு பற்றியும் தெரிந்திருந்தது. அக்காலகட்டத்திலேயே இரு பேரரசுகளுக்கும் தூதர்கள் இருந்தார்கள்.

* சமீபத்தில் Bud Weisser என்ற பெயர் கொண்டவர், Budweisser பியர் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகக் கைது செய்யப்பட்டார்!

* இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அவருடைய ரகசிய பாதுகாப்புப் படைக்கு ‘யுனிகார்ன்’ எனப் பெயர் சூட்டப்படும்.

* உலகின் மிக உயரமான சிலைகள் வரிசையில் முதல் 3 இடத்தில் இருப்பவை புத்தர் சிலைகளே!

* அமெரிக்காவில் அதிக ஆபத்து நிறைந்த வேலை அந்நாட்டின் குடியரசுத்தலைவராக இருப்பதுதான். பதவியில் இருக்கும்போதே 9 சதவீதத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.