செல்போனைக் கழுவலாம்!


தண்ணீரில் விழுந்தாலும் சேதமாகாத ஸ்மார்ட் போன் மாடல்களை பல நிறுவனங்கள் சமீபகாலங்களில் அறிமுகம் செய்துள்ளன. எனினும் அவற்றுக்கு சில நிபந்தனைகள் உண்டு. ஜப்பான் செல்போன் நிறுவனமான கே.டி.டி.ஐ வெளியிட்டிருக்கும் ‘டிக்னோ ரேஃபர்’, சோப்பு போட்டு கழுவும் அளவுக்கு பாதுகாப்பானது. அழுக்கானால் இதை சோப் போட்டு, தண்ணீர் விட்டு அலசிக் கழுவலாம். இதற்காக பிரத்யேக சோப்பு உண்டு!