வியக்க வைத்த உண்மை!
‘பைலகுப்பே - திபெத்தியர்களின் சரணாலயம்’ படித்தேன். இந்தியாவில் ஒரு சீனாவைப் பார்த்ததைப் போல் இருந்தது. அந்தப் பகுதியை குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் இருந்தது கட்டுரை. - எஸ்.தீபா சந்தோஷ், காரைக்குடி. நன்றி அறிவித்தல் நாள் கொண்டாட்டம் குறித்த நடுப்பக்கம் மிகவும் அசத்தல். - முகுந்தன், அம்பத்தூர்.
‘நம்பினால் நம்புங்கள்’ பகுதியில், தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சுக்காற்று ஒரு டெஸ்ட் ட்யூப்பில் அடைக்கப்பட்டு மிக்சிகனில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் ஆச்சர்யமாக இருக்கிறது. - கவிஞர்.கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
‘விண்கல்லில் சர்க்கரை இருக்கு!’ கட்டுரை படித்தேன். அருமை. பூமியில் எப்படி உயிரினங்கள் உருவாகின்றன என்பதை அறிய விண்கல் உதவுகிறது என்ற அறிவியல் உண்மை வியக்க வைத்தது. - சா.ரவிக்குமார், திருச்சி.
‘செல்ஃபி வித் சயின்ஸ்’ பகுதியில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து அதிரடியாகவே கற்றுத் தருகிறார் ஆதலையூர் சூரியகுமார். - கா.மீனாட்சிசுந்தரம், ரங்கம்.
|